பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள அரசு அலுவலகத்தில் தாலிபான் இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 23 பேர் கொல்லப்பட்டனர்.
பெஷாவர் நகரில் உள்ள தேசிய தரவு மையம் மற்றும் பதிவு அலுவலகத்துக்கு இன்று காலை மோட்டார் சைக்கிளில் வந்த அந்த நபரை, வாயிலின் அருகே பாதுகாவலர் தடுத்து நிறுத்திய போது, அவர் தன்னிடமிருந்த வெடிபொருளை வெடிக்கச் செய்தார்.
அவர் சுமார் 12 கிலோ அளவுக்கு வெடிப் பொருளை எடுத்து வந்திருக்காலம் என போலீஸார் தெரிவித்தனர்.
தற்கொலை தாக்குதல் நடத்திய நபர், வாயில் அருகே தடுத்து நிறுத்தப்படவிட்டால் உயிர் சேதம் அதிகமாக இருந்திருக்கும். சம்பவத்தின் போது அந்த அலுவலகத்தில் சுமார் 400க்கும் அதிகமானோர் கூடியிருந்தனர்.
இச்சம்பவத்தில் 23 பேர் இறந்துள்ளனர். குண்டுவெடிப்பு நடைபெற்ற இடத்தின் அருகே மனித உடலின் பாகங்கள் சிதறி கிடந்தன. படுகாயமடைந்த பலர் மர்தான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தெரீக்-ஐ-தாலிபான் என்ற அமைப்பு இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பொறுப்பேற்றுள்ளது. இதே அமைப்பு கடந்த ஆண்டு வாஹா எல்லையில் நடத்திய தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

வார பலன்கள் (ஏப். 24 - 30) - ரிஷபம்

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மேஷம்

என்ன, கரூர் சென்று செந்தில் பாலாஜி வாக்களிக்கவில்லையா? ஏன்??
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

