மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கல்வியில் சிறப்பு தரும் காமாட்சி அம்மன்!

கல்வி மற்றும் வாழ்வில் சிறப்பு தரும் தெய்வம் குன்னியூரில் காமாட்சி அம்மன்..

News image

காமாட்சி அம்மன்

Updated On :13 மார்ச் 2026, 11:08 am

காமாட்சி என்றால் காஞ்சியே நினைவுக்கு வரும். அவளுடைய சக்தி பிரவகிக்கும் தலங்களுள் ஒன்று "கன்னிபுரி க்ஷேத்திரம்' என்னும் குன்னியூர்.

ஆரம்பத்தில் இங்கு ஸ்ரீசீதளா பரமேஸ்வரி என்ற பெயரில் அம்பிகை கோயில் கொண்டிருந்தாள். காஞ்சி மகாபெரியவர் இங்கு வந்திருந்தபோது, இந்த அம்பிகையை தரிசித்து "ஸ்ரீகாமாட்சி' என்று திருப்பெயரிட்டுள்ளார்.

ஒருகாலத்தில் சரக்கொன்றை மரங்கள் நிறைந்த கிராமமாக கொன்றையூர் எனும் பெயருடன் திகழ்ந்து, பின்னர் கொன்னையூராக மருவி, தற்போது "குன்னியூர்' என அழைக்கப்படுகிறது.

இங்கு கொலுவிருக்கும் அம்பிகை, சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு பூமியிலிருந்து வெளிப்பட்ட சுயம்பு மூர்த்தம். அம்மனின் விக்ரகம் சிறியதானாலும், அவள் கீர்த்தி மிகப் பெரியது. அமர்ந்த கோலத்தில், வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்டபடி காட்சியளிக்கிறார். அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்று, கோயில் புதுப்பொலிவுடன் திகழ்கிறது.

விநாயகர், பாலசுப்பிரமணியர், நவகிரகங்கள், கருங்கல் சிலை ரூபமாகவும், ஐயப்பன் சுதை ரூபமாகவும், கலோடியான், காத்தவராயன், ஆரியமாலா, கருப்பழகி, சின்னான், கருப்பண்ணசாமி, அம்மன், வீரன் முதலிய கிராம தேவதைகள் மரத்தால் செய்யப்பட்டும் பிரதிஷ்டையாகி, பூஜைகள் செய்யப்படுகின்றன.

திருமணத் தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, பார்வைக் கோளாறுகள் நீங்க, சரும நோய்கள் குணமாக இத்தலத்தில் பக்தர்கள் வேண்டுகின்றனர். அவை நிறைவேறியதும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து, புத்தாடை அணிவித்து நேர்த்திக் கடனை நிறைவேற்றுகின்றனர்.

சித்திரையில் இங்கு தீமிதி விழா நடைபெறுகிறது. விசேஷ காலங்களில் அம்பாள் அன்ன வாகனம் அல்லது சிம்ம வாகனத்தில் எழுந்தருளுகிறாள்.

மன்னார்குடி} விக்கிரவாண்டி பேருந்துப் பாதையில் சத்திரத்தடி நிறுத்தத்திலிருந்து அரை கி.மீ. தொலைவிலும், கம்மங்குடி நிறுத்தத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவிலும் கோயில் அமைந்துள்ளது.

- அபிராமி மைந்தன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.