நினைத்த காரியம் கைகூடும் இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்
இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார்.


இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
நினைத்த காரியங்கள் கைகூடும். தொழிலை சிறப்பாக நடத்துவீர்கள். சந்தர்ப்பச் சூழ்நிலைகளுக்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.
மன பயம் விலகும். உத்தியோகஸ்தர்கள் இலக்குகளை நிர்ணயித்து பணிகளை முடிப்பார்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.
விவசாயிகள் தரமான விதைகளை வாங்கி பயிரிடுவார்கள். அரசியல்வாதிகள் அரசு அலுவலர்களை அரவணைத்துச் செல்லவும். கலைத்துறையினருக்கு புதிய மாற்றங்கள் ஏற்படும். பெண்கள் தெளிவாகச் சிந்தித்து செயல்படுவர்.
மாணவர்களின் தன்னம்பிக்கை கூடும்.
சந்திராஷ்டமம்} இல்லை.
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
மன அழுத்தம் குறையும். ஒருமித்த எண்ணத்துடன் செயல்படுவீர்கள். எதிர்ப்புகள் இருக்காது. ஆலயங்களுக்குச் சென்றுவருவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரிகளுக்கு வியாபாரம் உயர்வடையும். விவசாயிகள் பணியாளர்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவார்கள்.
அரசியல்வாதிகள் மீது எழும் விமர்சனங்களைப் பெரிதுபடுத்த மாட்டார்கள். கலைத்துறையினருக்கு வெளிவட்டார நட்பு மேம்படும். பெண்கள் குழந்தைகளால் பெருமையடைவார்கள். மாணவர்கள் வீண் வம்புகளில் ஈடுபட வேண்டாம்.
சந்திராஷ்டமம்}இல்லை.
மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
குடும்பத்தில் அந்தஸ்து உயரும். உடன்பிறந்தோரிடம் அன்பாக நடந்துகொள்வீர்கள். சொல்வாக்கு செல்வாக்காக உயரும். அநாவசிய பயணங்கள் ஏற்படாது.
உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகும். வியாபாரிகள் கொடுக்கல்} வாங்கலில் சீரான நிலையைக் காண்பார்கள். விவசாயிகளுக்கு பணிகளில் சுமை கூடும். அரசியல்வாதிகள் மேலிடத்துடன் விட்டுக் கொடுப்பார்கள்.
கலைத்துறையினரை சக கலைஞர்கள் கோபப்படுத்துவார்கள். பெண்கள் மகிழ்ச்சியான செய்தி உண்டு. மாணவர்கள் ஆசிரியர்களிடம் அன்பாகப் பழகுவார்கள்.
சந்திராஷ்டமம்} இல்லை.
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
உங்கள் திறமைகள் வெளிப்படும். சிலர் பழைய வீட்டை புதுப்பிப்பார்கள். புதிய வாகனங்களை வாங்குவார்கள். கடன்கள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களின் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டு. வியாபாரிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு உண்டு.
விவசாயிகளுக்குப் புதிய அனுபவங்கள் உண்டாகும். அரசியல்வாதிகள் தொண்டர்களின் எண்ணங்களைப் புரிந்துகொள்வார்கள்.
கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களால் திருப்தி அடைவார்கள். பெண்களுக்கு உறவினர்கள் தேவையான உதவிகளைச் செய்வார்கள். மாணவர்கள் முயற்சிகளில் வெற்றி காண்பார்கள்.
சந்திராஷ்டமம்} இல்லை.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
குடும்பத்தினரின் எண்ணங்களைப் புரிந்துகொள்வீர்கள். சுப காரிய முயற்சிகள் கைகூடும். உயர்ந்தவர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சகஜமான சூழ்நிலையைக் காண்பார்கள். வியாபாரிகளின் பிரச்னைகளில் தீர்வு கிடைக்கும். விவசாயிகளுக்கு புழு, பூச்சிகளால் சிறுபாதிப்பு ஏற்படலாம்.
அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு பண வரவு உண்டு. பெண்களுக்கு கணவருடன் நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்களின் கோரிக்கை நிறைவேறும்.
சந்திராஷ்டமம்} இல்லை.
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
குறை சொல்வோரை கண்டுகொள்ள மாட்டீர்கள். உடல் ஆரோக்கியம், மன வளம் சீராக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பொறுப்புகளை குறித்த காலத்துக்குள் நிறைவேற்றுவார்கள்.
வியாபாரிகளுக்கு தடைகள் விலகும். விவசாயிகள் பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வார்கள். அரசியல்வாதிகள் முயற்சிகளைத் தொடருவீர்கள்.
கலைத்துறையினர் நல்ல திட்டங்களை செய்து முடிப்பார்கள். பெண்களுக்கு கடன் தொல்லை, உடல் உபாதை இரண்டும் ஏற்படாது. மாணவர்கள் நல்ல விஷயங்களில் நாட்டம் கொள்வார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)
குடும்பத்தில் நிம்மதி பூத்துக் குலுங்கும். உறவினர்கள், நண்பர்கள் வீடுதேடி வருவார்கள். பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும்.
உத்தியோகஸ்தர்கள் கடுமையாக உழைப்பார்கள். வியாபாரிகள் சமுதாயத்தில் உயர்வைக் காண்பார்கள். விவசாயிகள் கொள்
முதல் வருமானம் உயரக் காண்பார்கள்.
அரசியல்வாதிகளின் காரியங்களில் தாமதம் தொடரும். கலைத்துறையினர் புதிய நுட்பங்களைப் பயன்படுத்தி செயலாற்றுவார்கள். பெண்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
சந்திராஷ்டமம்} இல்லை.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
தொழிலில் சாதகமான திருப்பங்களைக் காண்பீர்கள். சுப காரியங்கள் நடைபெறும். திட்டமிட்ட பணிகளில் வெற்றியைக் காண்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களைக் கவருவீர்கள். வியாபாரிகளின் திட்டங்கள், முயற்சிகளுக்கு செயல்வடிவம் கிடைக்கும். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்குவார்கள்.
அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். கலைத்துறையினரின் பொருளாதாரம் சீராக இருக்கும். பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப்
பெறுவார்கள்.
சந்திராஷ்டமம் - 6,7.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வருமானத்தில் இருந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். இலக்கை நிர்ணயித்து உழைப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் பணியில் உள்ள சூட்சுமங்களைப் புரிந்துகொள்வார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல்} வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். விவசாயிகள் புதிய கால்நடைகளை வாங்குவார்கள். அரசியல்வாதிகள் சரியாக அனுமானித்து செயலாற்றுவார்கள்.
கலைத்துறையினருக்கு வெற்றி உண்டு. பெண்களுக்கு இறை நம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்கள் யோகா கற்றுகொள்வார்கள்.
சந்திராஷ்டமம்} 8,9.
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
தொழிலில் பொறுப்புகள் உயரும். பொறாமைகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். யாருக்கும் ஜாமீன் தர வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணப் புழக்கம் நன்றாகவே இருக்கும்.
வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்துவார்கள். விவசாயிகளின் விடாமுயற்சியால் விளைச்சல் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு கூடும். கலைத்துறையினர் சக கலைஞர்களால் லாபம் பெறுவார்கள்.
பெண்கள் புதிய வீட்டுக்கு மாறுவார்கள். மாணவர்கள் தைரியமாக விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள்.
சந்திராஷ்டமம் - 10,11,12.
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
குடும்பத்தில் நிம்மதி இருந்தாலும், செலவுகள் கூடும். தொழிலில் வருவாயை பெருக்க முயற்சிப்பீர்கள். மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை முடித்து நற்பெயரை எடுப்பார்கள்.
வியாபாரிகள் சிறிய முதலீடுகளை மட்டுமே செய்வார்கள். விவசாயிகளின் பயிர்களுக்கு பூச்சிகளால் பாதிப்பு இருக்காது. அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். கலைத்துறையினருக்கு சீரான வருவாய் உண்டு.
பெண்கள் குடும்ப ஒற்றுமையைப் பேணி காப்பார்கள். மாணவர்கள் பெற்றோர்களை மதித்து நடக்கவும்.
சந்திராஷ்டமம்}இல்லை.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
வருவாய் அதிகரிப்பால் பழைய கடன்களை அடைப்பீர்கள். செயல்களில் விறுவிறுப்பு கூடும். புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்பு கூடும். வியாபாரிகள் பிறரால் புகழப்படுவார்கள். விவசாயிகளின் விளைபொருள்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். கலைத்துறையினர் புதிய பாதையில் பயணிப்பார்கள். பெண்கள் நற்பெயரை எடுப்பார்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் கவனம் செலுத்துவார்கள்.
சந்திராஷ்டமம்}இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...