மனிதப்பிறவி அரிதாயினும் அதுவே மிகுதியும் அஞ்சத்தக்கது. ஏனென்றால் அவர்கள் தம் செய்கையால் இந்தப் பிறவியினின்றும் மேலாயினும் கீழாயினும் போகக்கூடும்.
-பாம்பன் சுவாமிகள்
இனி என் வாழ்க்கை மற்றவர்களுக்குத் தொண்டு செய்வதற்கு மட்டுமே எஞ்சியுள்ளது.
-துக்காராம்
நீ உலக மக்களின் போற்றுதலையோ, தூற்றுதலையோ மனதில் வாங்கிக்கொள்ளாதே!
- ஸோபான பஞ்சகத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர்
காலசொரூபியான பகவான் ஆதியும் அந்தமும் இல்லாதவர். அதனால் சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், பிரளயம் எனப்படும் இந்தத் தொடர்புக்கு முடிவே கிடையாது.
-விஷ்ணு புராணம்
அஹிம்சைதான் தர்மமாகும். அதர்மத்தினால் கிடைத்த பொருளை, ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதுதான் விரதமாகும். ஆசையின்றி வாழ்வதுதான் தவமாகும். யாரிடமும் சூதுவாது இன்றி நடந்துகொள்வதுதான் பக்தியாகும். சுகம், துக்கம் இரண்டிலும் ஒன்றாக இருப்பதுதான் ஆச்சாரமாகும்; இது சத்தியம், இதற்கு பகவானே! நீங்கள்தான் சாட்சி.
-மகான் பசவேசர் (கர்நாடக மாநிலம்).
ஒரு பெரிய மலைகூட, இருந்த இடம் தெரியாமல் மறையலாம். ஆனால், சத்தியம் ஒருநாளும் நிலை மாறாது.
-ராமகீதை
பரந்த செல்வத்திலோ, கொடிய விசனத்திலோ மனிதனை வினைப்பயன் கயிற்றால் கட்டி இழுப்பதுபோல் இழுக்கிறது.
-வால்மீகி ராமாயணம், சுந்தர காண்டம்-37.3
தெய்வத்தைக் காட்டிலும் பெரியவனாக தொண்டன் இருக்கிறான். ஏனென்றால் தெய்வத்தை அவன் தன் உள்ளத்தில் வைத்திருக்கிறான்.
-பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்
இளமை, செல்வம், யாக்கை ஆகியவைகள் நிலையற்றவையாகும். ஆதலால் அவை நிலைத்திருக்கும்
பொழுதே இறைவனை வணங்க வேண்டும்.
-குமரகுருபரர்
நிறைவுற்ற மனம் உடையவன், எல்லாச் செல்வங்களையும் அடைந்தவனாகிறான். ஆமாம், கால்களில் தோல் செருப்பு போட்டுக்கொண்டிருப்பவனுக்குப் பூமி முழுவதும் தோல்கொண்டு மூடியதாக இருக்கும் அல்லவா?
-பஞ்ச தந்திரம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு
சிரி... சிரி...
அசத்தல்...
ஸ்டார்ட் அப்
வீடியோக்கள்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG
தினமணி வீடியோ செய்தி...

#t20 | இலங்கை Batting எப்படி இருக்கு? | T20 World Cup2026 Review | #SLvsENG |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

