பொன்மொழிகள்!
முருகப் பெருமான் நல்லவர்களுக்கு எளிதில் கிடைக்கும் ரத்தினம், பொன் போன்ற மேனி உடைய வள்ளியின் தலைவன் என்ற ரத்தினம், தன்னை வழிபடுபவர்களுக்கு சுகத்தை அளிக்கும் ரத்தினம், கோடி சூரிய பிரகாசம்


முருகப் பெருமான் நல்லவர்களுக்கு எளிதில் கிடைக்கும் ரத்தினம், பொன் போன்ற மேனி உடைய வள்ளியின் தலைவன் என்ற ரத்தினம், தன்னை வழிபடுபவர்களுக்கு சுகத்தை அளிக்கும் ரத்தினம், கோடி சூரிய பிரகாசம் உடைய ரத்தினம், பிரம்மன் சிவபெருமான் ஆகியவர்கள் இருவருக்கும் குருவான ரத்தினம், அற்புதமான வடிவம் உடைய ரத்தினம், சான்றோர்களின் குழுவால் போற்றப்பட்ட ரத்தினம். அத்தகைய ஸ்கந்தன் (கந்தன்) என்ற ரத்தினத்தை நாம் தியானம் செய்ய வேண்டும்.
-ஸ்ரீ சுப்பிரமணிய பஞ்சரத்தினம்
கோபாலர்கள் இனிமை, பசுக்கள் இனிமை, மாடுகள் விரட்டும் கம்பும் இனிமை, மாடுகளை ஒன்றுசேர்ப்பது இனிமை, பிரிப்பதும் இனிமை, பயனும் இனிமை மதுராபதியாகிய ஸ்ரீ கிருஷ்ணனைச் சேர்ந்த எல்லாமே இனிமையாகும்.
-வல்லபாச்சாரியார் (ஸ்ரீ மதுராஷ்டகம்)
ஓங்காரசொரூபியும், பகவானும், பரமபுருஷனும், மகானுபாவனும், வைகுண்டநாதனும் ஆகிய உனக்கு நமஸ்காரம்; தாமரைத் தளிர் போன்ற கைகளையுடைய சாதுக்களால் வருடப்பெற்ற பாதகமலம் படைத்தவனும் பரமபுருஷனும் சர்வேஸ்வரனுமாகிய உனக்கு நமஸ்காரம்.
-பாகவதம் 616.25
பக்தியைப் பெற்றவன் பக்தியையே காண்கிறான், அதையே கேட்கிறான், அதைப் பற்றியே பேசுகிறான், அதையே சிந்திக்கிறான்.
-தேவரிஷி நாரதர்
பிறப்பின் அடிப்படையில் உண்டாக்கப்படும் உயர்வுதாழ்வுகள் மனிதனால் உருவாக்கப்படுகின்றன; அவை நிலையில்லாதவை.
-கெüடில்ய அர்த்த சாஸ்திரம்
கசப்பான மருந்து உடலுக்கு நன்மை விளைவிக்கிறது. அதுபோல், உத்தம நண்பனின் வார்த்தை முதலில் கசப்பாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அது பின்னர் நன்மையை விளைவிக்கும்.
-மகாவீரர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...