தனி மனித சாதனை
மக்காவிலிருந்து சிரியா செல்லும் வழியில் வாழ்ந்தவர்கள் கிஃபாரி இனத்தினர். முதலில் வணிகம் செய்த இந்த இனத்தினர் பின்னர் வணிகக் குழுக்களை இரவில் வழிமறித்து வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டனர்.


மக்காவிலிருந்து சிரியா செல்லும் வழியில் வாழ்ந்தவர்கள் கிஃபாரி இனத்தினர். முதலில் வணிகம் செய்த இந்த இனத்தினர் பின்னர் வணிகக் குழுக்களை இரவில் வழிமறித்து வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டனர். இவர்களின் தலைவரான ஜூன் தப் என்ற சிறப்பு பெயருடைய அபூதர் கிஃபாரி. பகலில் தனித்து நின்று தேவைக்கு உரியதை மட்டும் பறிப்பார்.
கிஃபாரி என்பது இனப்பெயர்.
கிஃபாரி இனத்தினரின் பல தெய்வ உருவ வழிபாட்டை இவரின் உள்ளம் மறுத்தது. இறைவன் ஒருவனாகவே இருக்க வேண்டும் என்ற எண்ணம் இதயத்தில்
உதயமானது.
மக்காவில் ஏக இறைக் கொள்கையை ஒருவர் போதிப்பதாகக் கேள்வியுற்று பல கவிதைப் போட்டிகளில் வென்ற இவரின் தம்பி கவிஞர் அனீûஸ விசாரித்து வர மக்காவிற்கு அனுப்பினார். அனீஸ் ஏகக் இறைக் கொள்கையை எடுத்துரைத்தவர் உண்மையாளர் என்று ஏக இறைவனை ஏற்காதவரும், அக்கொள்கையை தூற்றுவோரும் சாற்றுவதாக விசாரணையை விளக்கி விசாரித்தார்.
மக்காவிற்குச் சென்று அபூதர்
கஃபாவிற்கு செல்லும் வழியில் அமர்ந்து கொண்டு வந்த உணவை உண்டு ஜம்ஜம் நீரைக் குடித்து யாருடனும் பேசாமல் இருந்தார். வெளியூர்க்காரர் என்று தெரிந்தால் வீட்டிற்கு அழைத்துச் சென்று விருந்தளிப்பது அரேபியர் வழக்கம். ஆனால் அபூதரை யாரும் கண்டு கொள்ளவில்லை. அலி (ரலி) விசாரித்தார்கள். இவர் வந்த காரணத்தை காதோடு கூறினார். அலி (ரலி) அவர்களும் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள். ஏக இறைக் கொள்கையை ஏற்று இஸ்லாத்தில் இணைந்தார்கள்.
அபூதர் (ரலி) அவர்களின் ஊர் சென்று உரத்த குரலில் ஏக இறைக் கொள்கையை மொழிந்தார்கள். அபூதர் (ரலி) ஏக இறைக் கொள்கையை வீரியமாகக் கூறினார்கள். இவர்களின் உறுதியைக் கண்டு இஸ்லாத்தை ஏற்கத் துவங்கினர். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்வதற்கு முன் பாதி கிஃபாரி இனத்தினர் இஸ்லாத்தில் இணைந்தனர். மீதி பாதி இனத்தினர் ஹிஜ்ரத்திற்கு பின் இஸ்லாத்தில் இணைந்தனர். ஒரு முழு சமுதாயத்தையும் இஸ்லாத்தில் இணைத்த தனிமனித சாதனை அபூதர் கிஃபாரி (ரலி) அவர்களுடையது.
அபூதர் கிஃபாரி (ரலி) அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்வார்கள். தாஹா நபி (ஸல்) அவர்களிடம் தயக்கமின்றி கேள்வி கேட்டு கேள்வி ஞானத்தால் அறிஞரான அபூர்வ தோழர் அபூதர் கிஃபாரி அவர்களிடமிருந்து 281 நபிமொழிகள் கிடைத்தன. அவற்றில் 31 மணிமொழிகள் புகாரியிலும்,
முஸ்லிமிலும் இடம் பெற்றுள்ளன.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வெளியில் செல்லும்பொழுது அபூதர் (ரலி) அவர்களை ஒட்டகத்தில் அமர்த்திக் கொண்டு செல்வார்கள். மாநபி (ஸல்) அவர்கள் ஒருமுறை மதீனாவை விட்டு வெளியே சென்ற பொழுது மதீனாவில் அவர்களின் பிரதிநிதியாக இருக்கச் செய்தார்கள்.
"என்னைப் பின்பற்றியவர்களில் இவர் ஈஸா நபி போன்றவர்' என்று புகழ்ந்தார்கள்.
ஒருநாள் இவர் இஸ்லாத்தை ஏற்கும் முன் செய்த பாவங்களை எண்ணி அழுவதைக் கண்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் இஸ்லாத்தை தழுவும் முன் செய்த பாவங்கள் இறைவனால் மன்னிக்கப்படும். நீங்கள் யாரை நேசிக்கிறீர்களோ அவருடன் நீங்கள் மறுமையில் இருப்பீர்கள்' என்று ஆறுதல் கூறினார்கள்.
அபூதர் (ரலி) தபூக் போருக்குச் செல்கையில் அவர்களின் ஒட்டகம் முரண்டு பிடித்து படுத்துவிட்டது. அவர்களின் முயற்சிகள் பயனளிக்கவில்லை. மூட்டைகளைச் சுமந்து பாலைவனத்தில் நடந்தார்கள்.
அவர்கள் நடந்து வருவதைப் பார்த்த பாச நபி (ஸல்) அவர்கள் ""அல்லாஹ் நல்லருள் புரிவானாக. அவர் தனியாக வருகிறார். அதேபோல் அவர் தனியாக இறப்பார். தனியாக அடக்கப்படுவார். மறுமையில் தனியாக எழுப்பப்படுவார்'' என்று கூறினார்கள். அண்ணல் நபி அவர்கள் இறப்பதற்கு முன் ""அபூதர் (ரலி) வாழ்நாள் முழுவதும் இப்பொழுது போன்றே இருப்பார். நான் இறந்த பின்னும் மாற மாட்டார்'' என்று வாழ்த்தினார்கள்.
அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகிய இரு கலீபாக்களும் அவர்களை மதித்துப் போற்றினர். உதுமான் (ரலி) ஆட்சியில் செலவு அதிகம் செய்யாமல் குர்ஆன் வழியில் குறைத்துச் செலவிடக் கூறினார்.
உதுமான் (ரலி) அவர்களை எதிர்த்தவர்கள் அவர்களுடன் சேர்ந்து கலீபாவை எதிர்க்கத் தூண்டினர். உதுமான் (ரலி) அவர்கள் ""தென்னை மரத்தில் அறைந்து கொன்றாலும், மலையுச்சியிலிருந்து உருட்டி உயிரை போக்கினாலும் மகிழ்வேன். உத்தம நபி (ஸல்) அவர்களின் உயரிய தோழர் உதுமான் (ரலி) அவர்களுக்கு எதிராக ஒருபோதும் அவர்களின் எதிரிகளான உதிரிகளோடு சேரமாட்டேன்'' என்று அவர்களை ஓட ஓட விரட்டினார்கள்.
ஹிஜ்ரி 32 -ஆம் ஆண்டில் ரபதாவில் இறந்தார்கள். இறக்கும் முன் அழுத அவர்களின் மகனையும், மனைவியையும் "நபிமொழியின் படி ஒரு குழு வந்து என்னை அடக்கம் செய்யும் அழாதீர்கள்' என்று ஆறுதல் கூறினார்கள். அதுபோல அவ்வழியில் வந்த அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களும், அவரின் நண்பர்களும் இஸ்லாமிய முறைப்படி அவர்களை அடக்கம் செய்தனர். அவர்களின் மகனையும், மகளையும் மதீனாவுக்கு அழைத்துச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...