பொன்மொழிகள்!
பிரம்மமாகிய பரமாத்மா பிரபஞ்சமாகத் தோன்ற முடியும். எனவே பிரபஞ்சமானது மாயை அல்ல. மோட்சத்திற்கு பக்தியே மிகவும் உயர்ந்த சாதனமாகும்.


பிரம்மமாகிய பரமாத்மா பிரபஞ்சமாகத் தோன்ற முடியும். எனவே பிரபஞ்சமானது மாயை அல்ல. மோட்சத்திற்கு பக்தியே மிகவும் உயர்ந்த சாதனமாகும்.
அருள்மயமான சிந்தனைகளும், ஆச்சார்ய நம்பிக்கையும் இருந்தால் நாம் நம்முடைய கர்ம பந்தங்களிலிருந்து விடுபட்டு முக்தி பெற முடியும்.
- விசிஷ்டாத்வைதம்
நாம் நமது பக்திக்கு இடையூறு விளைவிக்கும் தீயவர்கள் தொடர்பை, எல்லா வகையிலும் விட்டுவிட வேண்டும். ஏனென்றால் அப்படிப்பட்ட தீயவர்களின் தொடர்பு காமம், கோபம், அறிவுமயக்கம், நினைவு தடுமாற்றம், புத்தி அழிவு இப்படி நம்முடைய எல்லாவிதமான அழிவுகளுக்கும் காரணமாகிறது. இவைகள் (காமம், கோபம் முதலியவை) முதலில் சிறிய அலைபோல் தோன்றி, பிறகு தீயவர்கள் உறவினால் கடலைப்போல் விசாலமான உருவத்தைப் பெறுகின்றன.
- நாரத பக்தி சூத்திரம்
பணத்தைக்கொண்டு அனுஷ்டிக்கப்படும் தர்மம் விரைவில் அழிந்துபோகும். மற்றவர்களின் நன்மையின் பொருட்டு செலவு செய்வதிலும், பிறருக்கு உதவும் பொருட்டும் செலவிடப்படும் பணம் நமக்கு மோட்சத்தைத் தேடித் தரும்.
- பத்ம புராணம்
இந்த உலகில் உணவு, உறக்கம், இனப்பெருக்கம் ஆகிய இந்த மூன்றையும் அளவுகோலாக வைத்துப் பார்த்தால் எல்லா உயிரினங்களும் ஒரே வகையைச் சேர்ந்ததாகவே கருதப்படும். ஆனால் மனிதஇனத்துக்கும், மற்ற உயிரினங்களுக்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன?
மனிதன் தர்மத்தைக் கடைப்பிடிப்பதால் மற்ற உயிரினங்களைக் காட்டிலும் உயர்ந்தவனாகக் கருதப்படுகிறான்.
- ஹாரிதர் மகரிஷி
மனிதர்களின் மனம் எப்போதும் விருப்பு வெறுப்பு முதலியவைகள் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் புறத்தில் அழுக்காகவும், அழுக்கு வஸ்திரங்களை அணிந்தவர்களாகவும் இருந்தாலும் உண்மையில் சுத்தமானவர்கள்தான்.
இதற்கு மாறாக, எவர் மனம் கலங்கியிருக்கிறதோ, அவர்கள் வெளியே சுத்தமானவர்களாகக் காணப்பட்டாலும் அசுத்தமானவர்கள்தான்.
- நீதி த்விஷஷ்டிகா
பிரம்மமாகிய பரமாத்மா வேறு, ஜீவாத்மாக்கள் வேறு; உலகம் மாயை அல்ல, உலகம் உண்மையானது. பிரம்மா முதலான தேவர்களும்கூட சாதாரணமான ஜீவர்களே ஆவார்கள்.
பரமாத்மாவின் அருளால் மட்டுமே ஜீவாத்மாக்கள் இம்மையிலும் மறுமையிலும் நன்மை பெறுகின்றன.
- துவைத சித்தாந்தம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...