திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பொன்மொழிகள்!

அளவுக்கும் அதிகமாக உணவு உட்கொள்ளுதல், அளவுக்கும் அதிகமாக பருகுதல், தீயவர்களிடமிருந்து பரிசுகளை ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய பாவங்கள் நீக்கப்பட வேண்டும்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:47 pm

சுவாமி கமலாத்மானந்தர்

அளவுக்கும் அதிகமாக உணவு உட்கொள்ளுதல், அளவுக்கும் அதிகமாக பருகுதல், தீயவர்களிடமிருந்து பரிசுகளை ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய பாவங்கள் நீக்கப்பட வேண்டும்.

-அகமர்ஷண சூக்தம்

பரம்பொருள்தான் காரணமும், காரியமும் ஆக இருக்கிறது. அந்தப் பரம்பொருளைத் தரிசித்தபிறகு, இதயத்தின் முடிச்சுகள் அவிழ்ந்து போகின்றன; சந்தேகங்கள் எல்லாம் நீங்கிவிடுகின்றன; எல்லாவிதமான வினைப்பயன்களும் அழிகின்றன.

-முண்டக உபநிஷதம் 2.2.8

ஒருவன் தனக்கு உரிய கர்மங்களை முறையாகக் கடைப்பிடித்து வந்தாலே போதும்; அவன் மேன்மையடைந்துவிடுவான்.

- கருட புராணம்

கல்வி கற்பித்த ஆசிரியருக்குக் காணிக்கை தருதல், வேள்வி செய்தல், தவம் மேற்கொள்ளுதல், சாஸ்திரங்களைக் கற்றறிதல் ஆகிய நான்கையும் பாதுகாத்து வளர்க்க வேண்டிய கடமையாகக் கொள்ள வேண்டும். அவ்விதம் செய்யாவிட்டால், எந்த இடத்திலும் இவற்றால் உண்டாகும் பயன் கிடைக்காமல் பாழ்படும்.

-ஆச்சாரக்கோவை

இறைவனின் பெருமை பற்றிய ஞானத்துடன் கூடியதும், மற்ற எதனிடமும் காட்டப்படாமல் இறைவனிடம் மட்டும் காட்டப்படுவதுமான விசேஷ அன்பே பக்தி எனப்படும். இத்தகைய பக்தியால்தான் முக்தி கிடைக்குமே தவிர, வேறு வழியில் முக்தி கிடைக்காது.

-மத்வாச்சாரியார் (துவைதம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.