பொன்மொழிகள்!
உணவு கேட்டு தன்னிடம் வந்து நிற்பவனுக்கு உணவு அளிப்பவனே, "தானம் செய்தவன்' எனப்படுகிறான். அவனுக்கு வேள்வியின் பயன் முழுதும் கிடைக்கிறது. அவன் பகைவர்களையும் நண்பனாகப் பார்க்கிறான்.


உணவு கேட்டு தன்னிடம் வந்து நிற்பவனுக்கு உணவு அளிப்பவனே, "தானம் செய்தவன்' எனப்படுகிறான். அவனுக்கு வேள்வியின் பயன் முழுதும் கிடைக்கிறது. அவன் பகைவர்களையும் நண்பனாகப் பார்க்கிறான்.
-யஜுர் வேதம்
சர்வசக்தி வாய்ந்த இறைவனின் சக்தியே உலகத்தின் தோற்றத்துக்குக் காரணம். உலக சிருஷ்டியில் இறைவன் எந்தவித மாறுதலையும் அடைவதில்லை. உலக சிருஷ்டி, அவருடைய சக்தியின் செயலே தவிர வேறில்லை. அவர் அதில் சம்பந்தப்படுவதில்லை.
-ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர்
பரம்பொருளான பரமாத்மாவிடம் குறை எதுவும் கிடையாது. அது குறைபாடு எதுவும் அற்றதாகவும், எல்லாக் குணங்களும் பொருந்தியதாகவும் விளங்குகிறது.
-பிரம்ம சூத்திரம் 3.2.11
பகவான் கூறியது: என்னுடைய தெய்விகக் குணங்களையும் லீலைகளையும் கேட்பதாலும், கீர்த்தனம் முதலியவற்றைச் செய்வதாலும், என்னிடம் கங்கையின் பிரவாகம் போன்ற சித்தவிருத்தியுடன் கூடிய உத்தமபக்தி உண்டாகிறது. அந்த பக்தியே சம்சாரமாகிய மரணத்தை வெல்வதாகும்.
-ஸ்ரீ நாராயணீயம்
""இல்லக விளக்கது இருள் கெடுப்பது,
நல்லக விளக்கது நமசிவாயவே.''
பொருள்: "நமசிவாய' என்ற மந்திரம் உள்ளத்தில் விளக்காக இருந்து, மனதில் உள்ள இருளை நீக்குகிறது. நன்மைகள் வழங்கும் விளக்காக, "நமசிவாய' என்ற திருவைந்தெழுத்து விளங்குகிறது.
-அப்பர் 1.111
பகைமை எதையும் அழிக்கிறது; அன்பு எதையும் வளர்க்கிறது. இரண்டிற்கும் அவ்வளவு வித்தியாசம் இருக்கிறது.
-நீதி சாஸ்திரம்
வேடர்கள் ஒரு மானைக் காட்டி மற்றொரு மானைப் பிடிக்கிறார்கள். அதுபோல் இறைவன் நம்மைப் போன்று மனித உடல் எடுத்து வந்து, நம்மை வசப்படுத்துவான். அதை உணர்வதே வழிபாடாகும்.
-ஞானரத்னாவளி
உண்மையில் என் இயல்பான தன்மையும், அந்தப் பரம்பொருளும் ஒன்றேதான்.
-அவதூத கீதை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...