பொன்மொழிகள்!
ஒருவனுடைய மனதில் காமவாசனை இருக்குமானால், அவனுக்கு எங்கும் காமமே தென்படும். ஒருவன் மனதில் நாராயணன் நினைவு சரியாக இருந்தால், அவனுக்கு எங்கும் நாராயணனே தென்படுவான்.


ஒருவனுடைய மனதில் காமவாசனை இருக்குமானால், அவனுக்கு எங்கும் காமமே தென்படும். ஒருவன் மனதில் நாராயணன் நினைவு சரியாக இருந்தால், அவனுக்கு எங்கும் நாராயணனே தென்படுவான்.
-பாகவதம் தரும் நற்சிந்தனை.
ஆமை தனக்கு ஆபத்து வரும்போது, தன் அங்கங்களை எல்லாப் பக்கங்களிலிருந்தும் உள்ளே இழுத்துக்கொள்கிறது. அது போலவே எவன் தன்னுடைய எல்லா ஆசைகளையும் உள்ளே இழுத்துக்கொள்கிறானோ, அவனுடைய அந்தக்கரணத்தில் ஜோதிஸ்வரூபமான ஆத்மா பிரகாசிக்கிறது.
-மகாபாரதம்
பறவைகளும் விலங்குகளும் மலைக்காடுகளில் கொழுந்து விட்டெரியும் தீயில் பாதுகாப்பைத் தேடாது. அதுபோலவே தீய எண்ணங்கள் பிரம்மத்தை அறிந்தவன் மனதில் உண்டாகாது.
-யோகவாஷிட்ட சாரம்
""வயதினாலன்று, நரையினாலன்று, பொருளினாலன்று, உறவினர்களினாலன்று; எவர் அங்கங்களோடு வேதத்தைக் கற்றுணர்ந்தவரோ அவரே நம்முள் பெரியவர்'' என்று ரிஷிகள் தர்மத்தை ஏற்படுத்தினார்கள்.
-மனுஸ்மிருதி
ஒருவருக்கு நல்ல புத்தியும் மன ஒருமைப்பாடும் சேர்ந்த வாழ்க்கை அமைய வேண்டும். அந்த வாழ்க்கை வெண்ணிற ஆடையில் வண்ணம் கலந்தது
போல், நாளடைவில் நன்னடத்தை வாழ்க்கையாகப் பரிமளிக்கும்.
-வியாத கீதை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...