பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பொன்மொழிகள்!

ஆடாமல், அசையாமல், சோதனைகளால் தடுமாறாமல் நிச்சலனமாக இருக்கும் பக்தி ஒன்றையே இறைவன் விரும்புகிறார்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:04 pm

சுவாமி கமலாத்மானந்தர்

ஆடாமல், அசையாமல், சோதனைகளால் தடுமாறாமல் நிச்சலனமாக இருக்கும் பக்தி ஒன்றையே இறைவன் விரும்புகிறார்.

-ஸ்ரீ குருராகவேந்திரர்

யார் பூமியையும் அதில் உள்ள அனைத்தையும் உருவாக்கி இருக்கிறாரோ, மேலே உள்ள விண்ணுலகத்தைத் தாங்கி இருக்கிறாரோ, மூன்றடியால் மூன்று உலகங்களையும் அளந்தாரோ  அந்த விஷ்ணுவின் செயல் மகிமைமிக்கது.

-ரிக் வேதம்

நாம் எந்தவிதக் கைம்மாறும் கருதாமல் பிறருக்கு உதவி செய்ய வேண்டும். அந்த உதவி வீண் போகாது. அதன் பலன் பெரிய அளவில் நமக்கு மீண்டும் கிடைக்கும் என்பது உறுதியாகும்.

-ஒளவையார்

நீயேதான் எல்லாவற்றிற்கும் மூல காரணமான பரப்பிரம்மம்; நீயேதான் எல்லாவற்றிலும் பரவியுள்ள பரப்பிரம்மம்; நீயேதான் அழிவும் மாறுதல் அற்றதுமான அந்தப் பரப்பிரம்மம்.

-கைவல்ய உபநிஷதம்

தர்மகாரியங்களுக்காகச் செலவு செய்யாமல் தன்னுடைய சுகத்துக்காக சேமித்து வைப்பவன் முட்டாள். அவன் உயிருடன் இருந்தாலும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டவனுக்குச் சமம்.

-அக்கினி புராணம்

ஆன்மிக விஷயங்களில் கணவனும் மனைவியும் கருத்து ஒருமித்து இருப்பார்களானால், அவர்களுக்கு ஆன்மிக முன்னேற்றம் மிகவும் எளிதில் ஏற்படும்.

அன்னை ஸ்ரீ சாரதாதேவியார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.