எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பொன்​மொ​ழி​கள்!

தூய்​மை​யா​ன​வ​னாக இரு. அதற்​கும் மேலாக, நேர்​மை​யு​டன் இரு. ஒரு விநா​டி​யும் இறை​வன் மீது நம்​பிக்கை இழந்​து​ வி​டாதே! அப்​போது நீ ஒ​ளி​யைக் காண்பாய்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:12 pm

சுவாமி கமலாத்மானந்தர்


தூய்​மை​யா​ன​வ​னாக இரு. அதற்​கும் மேலாக, நேர்​மை​யு​டன் இரு. ஒரு விநா​டி​யும் இறை​வன் மீது நம்​பிக்கை இழந்​து​ வி​டாதே! அப்​போது நீ ஒ​ளி​யைக் காண்பாய்.
-சுவாமி விவே​கா​னந்​தர்

 என் கால்​கள் உங்​க​ளு​டைய திருத்​த​லங்​க​ளுக்​குச் செல்​வ​தி​லும், என் கைகள் உங்​க​ளுக்​குப் பூஜை செய்​வ​தி​லும், என் கண்​கள் உங்​க​ளு​டைய வடி​வத்​தைத் தரி​சிப்​ப​தி​லும், என் மூக்கு உங்​கள் பாதத்​தில் அர்ச்​சித்த துள​சியை முகர்​வ​தி​லும், என் காது​கள் உங்​க​ளு​டைய கதை​க​ளைக் கேட்ப​தி​லும் இன்​பு​று​வ​தற்கு என்​னு​டைய  துன்​பங்​க​ளைப் போக்கி அருள் புரி​யுங்​கள்.
-ஸ்ரீ நா​ரா​ய​ணீ​யம்

எவன் எந்த வித்​யை​யைக் கற்​றி​ருக்​கி​றானோ, அது​தான் அவ​னுக்கு மேலான தெய்​வம். அதைத்​தான் அவன் பூஜித்து அர்ச்​சனை செய்ய வேண்​டும். அது​தான் அவ​னுக்கு உதவி செய்​யும்.
-விஷ்​ணு​பர்​வம் 

இறை​வ​னு​டைய பக்​தர்​கள் அவர் புக​ழைப் பாடு​கி​றார்​கள். என்​றா​லும், எல்​லை​யற்ற அவரை முழு​மை​யாக அறிந்​த​வர்​கள் யாரும் இல்லை. சமுத்​தி​ரத்​தில் சேரும் ஓடை​கள் அந்த சமுத்​தி​ரத்​தின் ஆழத்தை எப்​படி அறிய முடி​யும்?
-குரு​நா​னக்

வயோ​தி​க​மும் மர​ண​மும் மனி​த​னு​டைய ஆயுளை ஒவ்​வொரு நாளும் அழிவை நோக்கி ஓட்டிச் செல்​கின்​றன.
 -தம்​ம​ப​தம்

எந்​தெந்த பக்​தன் எந்​தெந்த தேவ​தையை நம்​பிக்​கை​யு​டன் வழி​பட விரும்​பு​கி​றானோ, அவர்​க​ளின் அந்த நம்​பிக்​கையை நான் உறுதி உடை​ய​தா​கச் செய்​கி​றேன்.
-பக​வத்​கீதை 7.21

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.