எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பொன்மொழிகள்!

நாவினுக்கு ஆபரணம்போல் இருந்து சிறப்பு தருவது, "நமச்சிவாய' என்ற மந்திரத்தை ஓதுவதாகும். 

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:04 pm

சுவாமி கமலாத்மானந்தர்


 ""...நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே.'' 

பொருள்: நாவினுக்கு ஆபரணம்போல் இருந்து சிறப்பு தருவது, "நமச்சிவாய' என்ற மந்திரத்தை ஓதுவதாகும். 

-அப்பர் 1.105 

 காலை மாலை உச்சி ஆகிய மூன்று காலங்களிலும் ஜபம் செய்வதற்கு உரியது, என் தந்தையான ஸ்ரீ ராமபிரானின், ""ராம  ராம ராம'' என்னும் நாமங்களாகும். 
தீர்த்தங்களுக்குச் சென்று நீராடும்போதும், சந்தி வேளைகளில் தர்ப்பணம் செய்யும்போதும், சொல்லுவதற்கு உரியது, என் தந்தையான ஸ்ரீ ராமபிரானின், ""ராம  ராம ராம'' என்னும் நாமங்களாகும். 


தவத்தில் ஈடுபடும்போதும், ஜபங்கள் செய்யும்போதும் சொல்லுவதற்கு உரியது, என் தந்தையான ஸ்ரீ ராமபிரானின், ""ராம ராம ராம'' என்னும் நாமங்களாகும். 
நான் என்னுடைய உள்ளத்தில் உண்டான ஞானத்தால் நாள்தோறும் சிந்திக்கும் மந்திரம், என்னுடைய தந்தையான ஸ்ரீ ராமபிரானின், ""ராம ராம ராம'' என்னும் நாமங்களாகும்!

 -சிவவாக்கிய சித்தர்

 ஒருவர் பகவானுக்கு தங்கத்தை அர்ப்பணித்து புண்ணிய பலன்களைப் பெறுகிறார். அதைவிட நூறு மடங்கு அதிக புண்ணிய பலன்களை, பகவானை மலர்களால் அர்ச்சனை செய்வதன் மூலம் ஒருவர் அடைந்துவிட முடியும்.

 -அக்கினி புராணம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.