திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பொன்மொழிகள்!

நாம் பகவானின் நாமத்தை வாயாரப் பாடி, மனதில் சிந்தித்தால் நாம் முன்பு செய்த பழைய பாவங்களும், இனி நம்மிடம் வரயிருக்கும் பாவங்களும்கூட தீயில் போடப்பட்ட பஞ்சு போன்று அழிந்து போகும்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:31 pm

சுவாமி கமலாத்மானந்தர்


நாம் பகவானின் நாமத்தை வாயாரப் பாடி, மனதில் சிந்தித்தால் நாம் முன்பு செய்த பழைய பாவங்களும், இனி நம்மிடம் வரயிருக்கும் பாவங்களும்கூட தீயில் போடப்பட்ட பஞ்சு போன்று அழிந்து போகும்.

- ஸ்ரீ ஆண்டாள், திருப்பாவை 5

 நாம் பசுக்களைப் பாதுகாக்க வேண்டும்; பசுவை அடிக்கக் கூடாது; வெள்ளையாட்டையோ, செம்மறியாட்டையோ இம்சை செய்யக் கூடாது; வதைக்கக் கூடாது; இரண்டு கால்கள் உள்ள மனிதர்களையும் பறவைகள் முதலியவற்றையும் துன்புறுத்தக் கூடாது; ஒற்றைக் குளம்புள்ள குதிரை, கழுதை முதலிய பிராணிகளைக் கொல்லக் கூடாது; நாம் எந்த உயிருக்கும் இம்சை செய்யக் கூடாது.

- யஜுர் வேதம்

நீலமணிபோல சுடர்விடும் திருமேனி உடையவர் என்று புகழப்பெற்றவர் நம் பெருமான். அவருடைய திருநாமத்தை வாயால் சொல்லி உலகில் வாழுங்கள்.

- ஸ்ரீ நம்மாழ்வார், திருவாய்மொழி 4.1.5

ஞானம், அக்ஞானம் என்று இரண்டு பொருள்கள் இருக்கின்றன. இவை முறையே, ஜீவாத்மாவிற்கு முக்தியையும் பந்தத்தையும் அளிக்கின்றன. இவற்றில் ஞானத்திலிருந்து முக்தியும், அக்ஞானத்திலிருந்து கடுமையான பந்தமும் ஏற்படுகின்றன.

- வேதாந்த முழக்கம்

ஆத்மா எப்போதும் ஸத் வடிவமாக இருக்கிறது; அது ஞானமாகிய சித் வடிவமானது; அது துன்பத்தின் சுவடு ஒரு சிறிதும் இல்லாத ஆனந்த வடிவமானது. இந்த வகையில் ஆத்மா "ஸத்சித்ஆனந்தம் (சச்சிதானந்தம்)' என்ற ஸ்வரூப லட்சண பெயரால் அழைக்கப்படுகிறது.

- தத்துவபோதம்

"நாம் அளிப்பது மிகவும் குறைவு' என்ற எண்ணத்தில் நாணத்துடன், மற்றவர்களுக்குத் தானம் அளிக்க வேண்டும்.

- தைத்ரிய உபநிஷதம்

இந்த உலகத்தில் இறைவன், அனைவருக்கும் மனித உருவம் தாங்கியபடியே வந்து தன்னை காட்டி அருள்புரிகிறான்.

- திருமூலர்


பக்தி ஞானமாக உருமாற வேண்டும்; இறைவனிடம் பக்தி செலுத்துவதும், அவரை அறிந்துகொள்வதும் ஒன்றாகும். நாம், "இறைவனை நேசிக்கவும், அறியவும் எனக்குத் திறன் அளிக்க வேண்டும்' என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.

- தாயுமானவர்

 ஞானம் பெற்றவனுக்கு பயம் இல்லை. அவன் ஞானியாகிவிட்டான். "தனது கவலைகள், பேராசைகள், துயரங்கள் ஆகிய எல்லாமே வீண்தான்' என்பதை அவன் நன்கு அறிந்தவன். ஆதலால் அவன் எது வந்தாலும் மனஅமைதியோடு இருப்பான்.

- புத்தர்

குடி, கோபம், பிடிவாதம், மதவெறி, வஞ்சகம், பொறாமை, தற்புகழ்ச்சி, பிறரை இகழ்வது, ஆணவம், தீய எண்ணங்கள், புலால் உண்ணுதல் ஆகியவைதான் தூய்மையின்மையாகும்.

- புத்தர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.