திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பொன்மொழிகள்!

ஒருவன் இறைவனிடம் சரண் புகுந்தால், தவிர்க்க முடியாத விதியின் கட்டளைகளும் அகற்றப்படுகின்றன. அத்தகைய மனிதனின் தலையெழுத்தை, விதி என்னும் தேவதை தன் கைகளால் தானே அழித்துவிடுகிறது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:31 am

சுவாமி கமலாத்மானந்தர்

ஒருவன் இறைவனிடம் சரண் புகுந்தால், தவிர்க்க முடியாத விதியின் கட்டளைகளும் அகற்றப்படுகின்றன. அத்தகைய மனிதனின் தலையெழுத்தை, விதி என்னும் தேவதை தன் கைகளால் தானே அழித்துவிடுகிறது.

- ஸ்ரீ சாரதாதேவியார்

தடுக்க முடியாத நரகத்தையும் பாவத்தையும் இடி போன்று நாசம் செய்யும் மந்திரம் ஸ்ரீ ராமமந்திரம், மங்களத்தை அளிப்பது ஸ்ரீ ராமமந்திரம், பிறவித் துன்பத்தைப் போக்குவது ஸ்ரீ ராமமந்திரம், தெய்வ சாந்நித்தியம் தருவது ஸ்ரீ ராமமந்திரம், வானுலகிலும் பூவுலகிலும் பிரகாசிப்பது ஸ்ரீ ராமமந்திரம்.

- ஸ்ரீ ராமகர்ணாமிர்தம்

அதர்மம் உடைய உலக சுகங்களில் உழலும் மனிதனின் மனம் உலகியல் விஷயங்களில் பற்றுக்கொள்கிறது. என்னை நினைப்பவனுடைய மனம் என்னிடம் லயிக்கிறது.

-  ஸ்ரீ கிருஷ்ணன்( உத்தவ கீதை)

ஒரு மனிதன் கடலில் முழுகலாம், மேருமலையின் உச்சிக்குப் போகலாம், பகைவரைப் போரில் வெல்லலாம்; வாணிபம், விவசாயம், பல வித்யைகள், கலைகள் எல்லாம் பயிலலாம்; மிகுந்த முயற்சி செய்து ஒரு பறவையைப் போல் பரந்த ஆகாயத்தில் பறக்கலாம். கர்மவசத்தால் விதிக்கப்படாதது ஒருபொழுதும் நிகழாது; அதே சமயம் விதிக்கப்பட்டதை அழித்து விடவும் முடியாது.

 - பர்துருஹரியின் நீதி சதகம்

ஒரு சாதாரண மனிதனுக்கு அதாவது அஞ்ஞானிக்கு இந்த உலகம் ஆழ்ந்த துக்கத்தைத் தருவதாகும். அதே சமயத்தில் ஆத்மாவை அறிந்த விவேகிக்கு இதே உலகம் எப்போதும் பரமானந்தத்தையே தரக் கூடியதாக விளங்குகிறது. எப்படி என்றால், ஒரு குருடனுக்கு உலகம் இருளடைந்ததாகவே இருக்கிறது. கண்கள் உள்ள ஒருவனுக்கோ உலகம் பிரகாசத்துடன் தோற்றமளிக்கிறது.

- வசிஷ்டர் (யோகவாஷிட்ட சாரம்)

பகைவர்கள் பயத்திலிருந்து எப்போதுமே ராமர் என்னைக் காத்தருளட்டும். என்னிடம் இருந்த அளவு கடந்த அக்ஞான இருள் ராமராலேயே போக்கடிக்கப்பட்டது. ராமருக்கு எப்பொழுதும் நமஸ்காரம் செய்கிறேன். ராமரைக் காட்டிலும் உயர்ந்தது வேறு எதுவும் இல்லை. எனக்கு ராமர் மீது பக்தி அசைவற்றதாக இருக்கட்டும். ஸ்ரீ ராமசந்திரா! என்னை காத்தருளும்படி உன்னிடம் பிரார்த்தனை செய்கிறேன். 

 - ஸ்ரீ ராமகர்ணாமிர்தம்

இறைவனிடம் பக்தி செலுத்த வேண்டும். மேலும், "இறைவன் ஒருவன்தான் உண்மை, உலகம் நிலையற்றது' என்பதை பக்தர்கள் இடைவிடாமல் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அரசமரம்தான் உண்மை, அதன் பழங்கள் சில நாட்களுக்கு மட்டும்தான் இருக்கும்.

- ஸ்ரீ ராமகிருஷ்ணர் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.