பொன்மொழிகள்!
“நமது வாழ்க்கையில் ஏற்படும் நன்மைகள் அனைத்திற்கும் இறைவன்தான் காரணம்’ என்றும், “தீமைகள் அனைத்திற்கும் நீயே காரணம்’ என்றும் எடுத்துக்கொள்வது உனக்கு நல்லது.


“நமது வாழ்க்கையில் ஏற்படும் நன்மைகள் அனைத்திற்கும் இறைவன்தான் காரணம்’ என்றும், “தீமைகள் அனைத்திற்கும் நீயே காரணம்’ என்றும் எடுத்துக்கொள்வது உனக்கு நல்லது. இதுவே மனதை தூய்மைப்படுத்திக் கொள்வதற்கு உரிய வழியாகும். இதனால் பக்தியும் சிரத்தையும் இறைவனின் அருளும் உனக்குக் கிடைக்கும்.
- சுவாமி விவேகானந்தர்
மனிதன் கற்ற கலை அனைத்தும் பயிற்சியின்மையால் அழிந்துவிடும். ஆனால் இந்த ஆத்மஞானக்கலை என்ற வித்யை மட்டும் ஒருமுறை ஒருவனின் மனதில் எழுந்துவிட்டால், அது மேன்மேலும் வளர்ந்து கொண்டே வரும்.
- வசிஷ்டர் (யோகவாஷிட்ட சாரம்)
ஞானம் பெற்றவனுக்கு பயம் இல்லை. அவன் ஞானியாகி விட்டான். “தனது கவலைகள், பேராசைகள், துயரங்கள் ஆகிய எல்லாமே வீண்தான்’ என்பதை அவன் நன்கு அறிந்தவன். ஆதலால் அவன் எது வந்தாலும் மனஅமைதியோடு இருப்பான்.
- புத்தர்
மங்கலங்களுக்கு ஆதிகாரணமும், கலியுகத்தின் தோஷத்தை எரிப்பதும், தூய்மை தரும் பொருள்களுக்கு பரிபூரணத்தூய்மை தருவதும், புகழ்பெற்ற மோட்ச மார்க்கத்தில் செல்லப் புறப்பட்டவர்களுக்கு வழியில் உண்ணும் கட்டுச் சோறு போன்றதும், ஆன்மிகப் பயணம் செய்பவர்களுக்கு இளைப்பாறும் ஒரே இடமாக இருப்பதும், சிறந்த கவிகளின் வசனமும், உயிருக்கு உயிராகியதும், தர்மம் என்ற மரத்திற்கு விதை போன்றதும் ஆகிய ராமநாமம் உங்களுடைய ஆன்மிகச் செல்வத்திற்குக் காரணமாக விளங்குகிறது.
- ஸ்ரீ ராமகர்ணாமிர்தம்
காதுகளுக்கு ஆபரணம் நல்ல கேள்வியேயன்றிக் குண்டலங்களன்று, கைகளுக்கு ஆபரணம் தானமேயன்றிக் கங்கணங்களன்று, கருணை மிக்கவர்களின் உடலுக்கு ஆபரணம் பரோபகாரயேயன்றிச் சந்தனப் பூச்சன்று.
- பர்துருஹரியின் நீதி சதகம்
ஞானிகளின் உள்ளம் ஆத்மானுபவமாகிய பேரின்பத்தில் மட்டும் ஈடுபட்டிருக்குமானால், “உலக வாழ்க்கை’ என்ற துன்பத்தால் அழிவடையும் மனிதர்கள் யாரைச் சரணடைய முடியும்?
- வசிஷ்டர் (யோகவாஷிட்ட சாரம்)
செப்பிடு வித்தைக்காரனுடைய மாயாஜாலங்கள் அவனை மயக்காது, பிறரை மயக்கும். அது போல, யோக மாயையானது பகவானை மயக்காது, பிறரையே மயக்கும்.
- ஆதிசங்கரர்
மாயை வழியைத் திறக்காவிட்டால் உனக்கு எப்படி முக்தி கிடைக்கும்? மனிதனே! இறைவனிடம் சரணடை. அப்போதுதான் மகாமாயை கருணைகூர்ந்து உன் முக்திக்கு உரிய வழியைத் திறப்பாள்.
- ஸ்ரீ சாரதாதேவியார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...