/

புண்ணிய பூமியில் புனிதப் பயணம்  - 11

பாலஸ்தீன தேசத்தில் புனித நகரங்கள் யூதர்கள்,  கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களின் புனித இடங்கள் பாலஸ்தீனத்திலும் உள்ளன.

News image
Updated On :31 ஜனவரி 2024, 8:07 am

ஜெபலின்ஜான்


பாலஸ்தீன தேசத்தில் புனித நகரங்கள் யூதர்கள்,  கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களின் புனித இடங்கள் பாலஸ்தீனத்திலும் உள்ளன. பாலஸ்தீனத்தில் உள்ள மேற்குகரை (ரஉநப ஆஅசஓ) இயேசு பிறந்த இடமான பெத்லஹேம் நகரம், இயேசு பிறப்பு குறித்த நற்செய்தியை மேய்ப்பர்களுக்கு இறைதூதர் அறிவித்த இடம், இறந்து போன லாசரு என்பவரை இயேசு உயிரோடு எழுப்பிய பெத்தானியா நகரம் உள்ளன. 
அதேபோன்று விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் மோசேவுக்கு பின்னர் யோசுவா தலைமையில் இஸ்ரேலியர்கள் இஸ்ரேலுக்குள் நுழையும்போது எரிகோ கோட்டைச் சுவரை இடித்த இடமான எரிகோ நகரம், இயேசுவை சாத்தான் பரிசோதனை செய்த உயரமான மலை, எரிகோ நகருக்கு இயேசு வரும்போது காட்டு அத்தி மரத்தில் ஏறி ஒளிந்திருந்த இடம் உள்ளிட்டவை பாலஸ்தீனத்தில் தான் உள்ளது.
1947-ஆம் ஆண்டு இஸ்ரேல், பாலஸ்தீன நாடுகளுக்கு பிரிட்டன் அரசு சுதந்திரத்தை வழங்கியது. அப்போது பாலஸ்தீன நாட்டுக்கு கலிலேயா, ஜோப்பா, நாசரேத் ஆகியவை பாலஸ்தீன நாட்டுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. எருசேலம் நகரம் மட்டும் ஜோர்தான் நாட்டின் மேற்பார்வையில் ஐ.நா.வின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தது.
1948-இல் நடந்த போரில் பாலஸ்தீன நாட்டின் சில பகுதிகளை இஸ்ரேல் நாடு கைப்பற்றியது. ஆனால், 1967-ஆம் ஆண்டு நடந்த 6 நாள் போரின்போது பாலஸ்தீன நாட்டின் பெரும் பகுதியை இஸ்ரேல் ராணுவம் கட்டுக்குள் கொண்டு வந்தது. அந்த போரின்போது பெரும்பகுதி பாலஸ்தீனர்கள், மேற்குக்கரை, காசா பகுதிகளுக்கு சென்று ஒதுங்கினர். 1947-இல் பிரிட்டன் சுதந்திரம் வழங்கியபோது இருந்த வரைபடத்தோடு ஒப்பிட்டால் பாலஸ்
தீனம் என்ற நாட்டையே குக்கிராமம் போல சுருக்கி தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டது இஸ்ரேல். 
பொருளாதாரத்தில் மிகவும் மோசமான நிலையில் பாலஸ்தீனம் இருந்து வருகிறது. சுற்றுலா மூலம் கிடைக்கும் வருவாயை தவிர பெரிய அளவில் தொழில் வாய்ப்பு இல்லாத நாடாக பாலஸ்தீனம் உள்ளது. மேற்குகரை, காசா பகுதிகள் பாலஸ்தீன நாடாக இருந்தாலும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகிறது. இஸ்ரேல் தேசத்தை பொருத்தவரை பாலஸ்தீனம் தங்களது நாட்டுக்குள் இருக்கும் ஒரு மாநிலம் என்றே கருதுகிறது. 
இஸ்ரேலில் இருந்து மேற்குகரை, காசா பகுதிகளுக்குள் செல்ல இஸ்ரேலியர்களுக்கு கடவுச்சீட்டு, விசா தேவையில்லை. அதேபோல மேற்குகரை, காசா பகுதி பாலஸ்தீனர்கள், இஸ்ரேலுக்குள் வர கடவுச்சீட்டு, விசா தேவையில்லை. பாலஸ்தீனத்துக்குள் செல்லும் இஸ்ரேலியர்களும், இஸ்ரேலுக்குள் வரும் பாலஸ்தீனர்களும் பகல் நேரத்தில் தங்கிக்கொள்ளலாம். இரவு நேரத்தில் தங்களது சொந்த பகுதிகளுக்கு திரும்பி
விட வேண்டும் என்பது மட்டும் தான் முன்நிபந்தனை.

(தொடரும்...)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.