* கடுங்காற்றில் கைவிளக்கை வைத்துக்கொண்டு, "காற்று அணைத்துவிட்டது!' என்ற சொல்வது அறியாமையே ஆகும். அது போலவே எந்த ஒரு முயற்சியும் செய்யாமலே இருந்துவிட்டு, "விதி எம்மை வீழ்த்தி விட்டது' என்று சோர்வதும்
அறிவின்மையேயாகும்.
- குமரகுருபரர்
* நன்றி கெட்டவர்களுக்கு அபகீர்த்தியுடன் பல கஷ்டங்களும் வரும். அவை இந்த உலகத்தில் மட்டுமின்றி மறு உலகத்திலும் தொடரும்.
- பஞ்சதந்திரம்
* நெருப்பு உள்ள இடங்களில்எல்லாம் ஒளி உண்டு என்றாலும், விளக்கிடம் அதற்குத் தனிப்பெருமை உண்டு. அது போலவே, "உலகப் பொருள்கள் அனைத்திலும் இறைவன் அருள் வெளிப்படும்' என்றாலும், சிறந்த தெய்வபக்தர்களிடம் அவனருள் மிகவும் நன்றாக வெளிப்படும்.
- நீதிவெண்பா
* தாறுமாறான எண்ணங்கள் கொள்ளுதல்; ""தானத்தினால் என்ன பயன்?'', ""யக்ஞம் செய்தவர்கள் என்ன கண்டார்கள்?'', ""புண்ணியமாவது, பாபமாவது'', ""இந்த உலகத்திலும் தர்மம் ஒன்றுமில்லை, பரலோகமும் கிடையாது'' என்றெல்லாம் நினைப்பது தவறாகும்.
- பெளத்த மதம்
* அஞ்ஞானத்தால் தோன்றிய அனைத்தும் ஞானம் உதித்தவுடன் மறைந்து போகிறது.
* உடல் முதலிய தொகுதிகளை "தான்' அல்லது "ஆத்மா' என்று கருதுவது அவித்தை அல்லது அக்ஞானம்.
* தன்னுடைய சிருஷ்டியில் இறைவன் ஒருபோதும் இரக்கமற்றவனாகவும் நீதி வழுவியனாகவும் இருப்பதில்லை. - ஆதிசங்கரர்
* இறைவனை வணங்கி வழிபட்டாலன்றி பொய், பொறாமை முதலிய தீய குணங்களை அகற்ற முடியாது.
* இறைவா! பிறரிடம் நான் சென்று யாசிக்காமல் இருக்கும் தகுதியை நீ எனக்கு அருள் புரிய வேண்டும். பிறர் என்னிடம் வந்து யாசிக்கும்போது, "இல்லை' என்று மறுக்காத இயல்பையும் நீ எனக்கு அருள்புரிய வேண்டும்.
- வடலூர் வள்ளலார்
* காலம் தவறாமல் நீராடுவதும், காய்கறி வகைகளை உண்பது மட்டுமே முக்தியளிக்கும் என்று நினைத்தால் மீன்களுக்கும் குருவிகளுக்குமே முதலில் முக்தி கிடைக்கும்.
- கபீர்தாசர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்
வீடியோக்கள்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG
தினமணி வீடியோ செய்தி...

#t20 | இலங்கை Batting எப்படி இருக்கு? | T20 World Cup2026 Review | #SLvsENG |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

