சம்சாரம் எனப்படும் தோற்ற உலகம் மதிமயக்கத்தின் விளைவு. அது பாரமார்த்திக உண்மையன்று.
- ஆதிசங்கரர்
தவளை குதித்துச் செல்வதால் உண்டாகும் நீர் அசைவினால், பெரிய யானையின் நிழலைக் காண்பதும் அரிதாக இருக்கும். அதுபோல் பகை சிறியதாக இருந்தாலும், அதனால் உண்டாகும் விளைவு பெரியதாக இருக்கக்கூடும்.
- குமரகுருபரர்
எந்த மனிதனும் தர்மத்தை மட்டுமோ, பாவத்தை மட்டுமோ செய்துகொண்டிருக்க முடியாது.
- மகாபாரதம்
செல்வம் உடையவன் அதைத் தனித்து அனுபவித்தால், அதை அவன் இழந்தவன் என்றே கருத வேண்டும்.
- புத்தர்
ஒளிவடிவமான சூரியனிடம் எப்படி இருள் இல்லையோ, அப்படியே அறிவு வடிவமான ஆத்மாவில் அஞ்ஞானத்திற்கு இடமில்லை.
- ஆதிசங்கரர்
உலகம் தரும் இன்ப துன்பங்களுக்கிடையில் இறைவா, உன்மீது நான் கொண்டிருக்கும் பக்தியை என்றும் மாற்றாமல் வைத்திருப்பேனாக.
- பட்டினத்தார்
யானை உண்ணும் கவளத்தில் ஒரு சிறு பகுதி கிடைத்தால்கூட, அது பல்லாயிரம் எறும்புகளுக்கு உணவாகும். அதுபோல் பணக்காரர்கள் வீணாகச் செலவிடும் பணத்தில் ஒரு பகுதியைக் கொண்டுகூட, ஏழைகள் பலர் நன்றாக வாழ முடியும்.
- குமரகுருபரர்
சென்றது இனி மீளாது மூடரே, எப்போதும் சென்றதையே சிந்தனை செய்து மாளாதீர்.
- பாரதியார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்
வீடியோக்கள்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG
தினமணி வீடியோ செய்தி...

#t20 | இலங்கை Batting எப்படி இருக்கு? | T20 World Cup2026 Review | #SLvsENG |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

