எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பொன்மொழிகள்!

சேராததை முடித்து வைப்பது எதுவோ, அதுதான் மாயை. எது இன்னதென்று சொல்ல முடியாதோ அதுதான் மாயை. - வடமொழி சுலோகம்

News image
Updated On :30 ஜனவரி 2024, 3:56 pm

சுவாமி கமலாத்மானந்தர்

சேராததை முடித்து வைப்பது எதுவோ, அதுதான் மாயை. எது இன்னதென்று சொல்ல முடியாதோ அதுதான் மாயை. - வடமொழி சுலோகம்

"சம்சார மாயை' என்ற தூக்கத்திலிருந்து விழிப்பது எளிதன்று. அதற்கு, "மாயைலிருந்து விடுபட வேண்டும்' என்ற தீவிர விருப்பம் உள்ளத்தில் பொங்க வேண்டும். அன்றியும் கத்திமுனைமேல் நடப்பது போன்று இடைவிடாத ஜாக்கிரதையுடன் புலன்களையும், மனதையும் மாசற நிறுத்தி வேற்றுமை உணர்ச்சியை அறவே நீக்க வேண்டும். - உபநிஷதம்

செப்பிடு வித்தைக்காரனுடைய ஜாலங்கள் அவனை மயக்காது, பிறரை மயக்கும். அதுபோல, யோக மாயையானது பகவானை மயக்காது, பிறரையே மயக்கும்.
- ஆதிசங்கரர்

குருடன் வழியில் இருக்கும் வைக்கோல் துரும்பை மிதித்தாலும் பயம் கொள்கிறான். அது போல மாயையால் கட்டுண்டவர்கள், ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் கண்டு பயமடைகிறார்கள். - ஞானதரிசிவி

ரிக் வேதமானது, ""எல்லா உலகங்களுக்கும் தானே தலைவனாகி, முத்தொழில்களையும் நடத்துகின்றவன் எவனோ, அவனே சிவபெருமான். நீங்கள் விரும்பும் தத்துவப் பொருளும் அவனே'' என்று கூறுகிறது.

யஜுர் வேதமானது, ""சிறந்த யாகங்களாலும், யோக சாதனைகளாலும், உலகத்தில் உள்ளோரால் துதிக்கப்படும் பொருளாக இருப்பவன் எவனோ, அவனே சிவபெருமான். நீங்கள் வினவும் தத்துவப் பொருளும் அவனே'' என்று கூறுகிறது.

சாம வேதமானது, ""எவன் மூன்று லோக நிலைகளையும் இயக்குகின்றவனோ, எவன் யோகநிஷ்டையில் இருக்கும் முனிவர்களால் துதிக்கப்படுகின்றவனோ, எவன் தனது ஒளிப்பிழம்பால் எல்லாப் பொருள்களையும் விளங்கச் செய்கிறானோ, அவனே சிவபெருமான். நீங்கள் வினவும் தத்துவப் பொருளும் அவனே'' என்று கூறுகிறது. - அதிவீரராம பாண்டியர்

அகிம்சை மனித இனத்தின் நியதியாகும். அது வாழ்க்கையின் நியதியும்கூட. அகிம்சை என்பதில், மற்ற எல்லா நற்குணங்களும் அடங்கிவிடுகின்றன. - மகாபாரதம்

அதர்வண வேதமானது, ""ஆனந்தக் கண்ணீர் சிந்தவும், ரோமம் சிலிர்க்கவும், மனம் நெக்குவிட்டு உருகி அன்பினால் எக்காலத்திலும் தன்னை உணரும் உணர்வுடையவர்கள் சிவபெருமானை தியானித்துத் துதிக்கிறார்கள். தனது திருவருளால் தன்னையறியச் செய்பவன் எவனோ, அவனே சிவபெருமான். நீங்கள் வினவும் தத்துவப் பொருளும் அவனே‘‘ என்று கூறுகிறது. - அதிவீரராம பாண்டியர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.