பொன்மொழிகள்!
நீ சாப்பிடும் எந்த உணவையும் முதலில் இறைவனுக்குச் சமர்ப்பணம் செய். இறைவனுக்குச் சமர்ப்பிக்கப்படாத உணவை ஒருவன் சாப்பிடக் கூடாது.


* நீ சாப்பிடும் எந்த உணவையும் முதலில் இறைவனுக்குச் சமர்ப்பணம் செய். இறைவனுக்குச் சமர்ப்பிக்கப்படாத உணவை ஒருவன் சாப்பிடக் கூடாது.
* இறைவன் திருவடிகளில் மனிதன் முழுமையாகச் சரணடையும்போது, இறைவன் அவனுக்கு எல்லாவற்றையும் அருள்கிறார்.
* இறைவனிடம் சரணடைந்தவன்தான் காப்பாற்றப்படுவான்.
* இறைவன் எல்லோருக்கும் சொந்தமானவன். இறைவனிடம் தீவிரமாகப் பிரார்த்தனை செய்பவனுக்கு அவரது தரிசனம் கிடைக்கும்.
* தினந்தோறும் சிறிது ஆன்மிக சாதனை செய்தாலும், அது மனதிலிருந்து வீணான நினைவுகளை நீக்கிவிடும்.
* மனதை எப்போதும் இளமையாகவும், உற்சாகமாகவும் வைத்திருக்க வேண்டும்.
* தூயமனம் கொண்டவர்கள் எல்லாவற்றையும் தூய்மையானதாகவே காண்கிறார்கள்.
* உலக வாழ்க்கையில் பற்று குறையக் குறைய, அந்த அளவுக்கு ஒருவன் மனஅமைதி பெறுகிறான்.
* அன்பில்லாத மனிதனை மனிதன் என்று சொல்லக் கூடாது. அவனை, "மிருகம்" என்றுதான் சொல்ல வேண்டும்.
* இடைவிடாமல் குருவிடம் பக்தி செலுத்துவதன் மூலிலம் சீடன் முக்தியடைகிறான். - அன்னை ஸ்ரீ சாரதாதேவியார்
* பசியினால் துன்புற்றுக் கன்னத்தில் கைகளை வைத்துக்கொண்டு, கண்களில் நீர் கலங்க வருந்தும் ஏழை மக்களுக்கு ஆகாரம் கொடுத்து அவர்களின் வருத்தத்தை மாற்றுவதே ஜீவகாருண்யமாகும். - வடலூர் வள்ளலார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...