எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பொன்மொழிகள்!

மனதை இறைவனிடம் சமர்ப்பணம் செய்பவனுக்கு, இறைவனே எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து தருகிறார்.     

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:09 pm

சுவாமி கமலாத்மானந்தர்

* மனதை இறைவனிடம் சமர்ப்பணம் செய்பவனுக்கு, இறைவனே எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து தருகிறார்.     
* கள்ளம், கபடம் உள்ளவர்களுக்கு இறைவனிடம் உடனே நம்பிக்கை வராது.  கபடக்காரனுக்கு இறைவன் வெகு தொலைவில் இருக்கிறான். 
* ஜபம், தியானம் போன்ற ஆன்மிக சாதனைகளைச் செய்வதற்காகவே நீங்கள் மனிதனாகப் பிறந்திருக்கிறீர்கள்.      
* ஐம்புலன்களை வென்றால் மனிதன் மாமனிதன் ஆகலாம். புலன்களை வென்றவனால் சாதிக்க முடியாதது ஏதாவது உண்டா? 
* உலக விஷயங்களைப் பற்றிய பேச்சை அடியோடு விட்டுவிடு. இறைவனைப் பற்றி பேசுவதைத் தவிர வேறு எந்தப் பேச்சையும் பேசாதே. 
* பூரணஞானம் ஏற்படும்போது, மனிதன் மெüனமாகி விடுகிறான்.  கடவுள், உலக ஆசைகள் கொண்ட மனதிற்குப் புலப்படாதவர்.
* பக்தியே மனித வாழ்க்கையின் சாரம். அகங்காரம் இருக்கும் வரையில்  முக்தி கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.
* இறைவனிடம் பக்தி செலுத்துவது ஒன்றுதான் மனிதப்பிறவி எடுத்ததன் நோக்கம்.
* உன்னுள் இருக்கும் தெய்விகம் அதிகரித்ததும், உன்னிடம் உள்ள குற்றங்கள் அனைத்தும் தானாகவே மறைந்துவிடும்.  
* உலகப்பற்று குறையும் அளவுக்கேற்றபடி ஞானமும் வளர ஆரம்பிக்கும். உன் மனதிற்குத் துரோகம் செய்யாதே. உன் மனசாட்சியின்படி நடந்துகொள்.    
- பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்
* விவேகமற்றவனே! கோவிந்தனை வழிபடு, கோவிந்தனை வழிபடு, கோவிந்தனை வழிபடு. பிறவிக் கடலை கடப்பதற்கு நாமஸ்மரணையைத் தவிர வேறு உபாயத்தை நாங்கள் காணவில்லை.         
- பஜகோவிந்தம்
* பிரணவப் பொருளும் மகாபுருஷனும் தெய்விகக் குணங்கள் மலருமிடமும், எல்லையற்றவனும், புலன்களுக்கு எட்டாதவனுமாகிய பகவானுக்கு நமஸ்காரம்.
- பாகவதம்
* பிறன் வசத்தில் இருப்பதைவிட மேலான துன்பமும் இல்லை. தன் வசத்தில் இருப்பதைவிட மேலான இன்பமும் இல்லை.
- சுக்கர நீதி
* தன்னடக்கம் பழகாதவர்கள், துர்நடத்தை உடையவர்கள், மனஅமைதி பெறாதவர்கள், தியானம் பழகாதவர்கள், சஞ்சலப்பட்டுக்கொண்டிருப்பவர்கள் பெரும் படிப்பாளிகளாயிருந்தாலும் பரமாத்மாவை அடைய முடியாது. உள்ளம் தெளிந்தவர்கள், தூய வினையாற்றுபவர்கள், புலனடக்கம் பழகியவர்கள் இத்தகைய பண்பாட்டுடையவர்களுக்கே பரமாத்மா தன்னைக் காட்டி அருள்கிறான்.
- கடஉபநிஷதம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.