திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பொன்மொழிகள்!

பேச்சைக் கண்டு ஏமாறாதீர்கள். ஒழுக்கத்தைக் கண்டு உறவுகொள்ளுங்கள். பேச்சுக்கும் நடத்தைக்கும் சம்பந்தம் இல்லாதவர்களுடன் உறவுகொள்வது பிழை.    

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:59 pm

சுவாமி கமலாத்மானந்தர்

பேச்சைக் கண்டு ஏமாறாதீர்கள். ஒழுக்கத்தைக் கண்டு உறவுகொள்ளுங்கள். பேச்சுக்கும் நடத்தைக்கும் சம்பந்தம் இல்லாதவர்களுடன் உறவுகொள்வது பிழை.    
-  தாயுமானவர்

அக்கினி முதலிய தேவர்கள் பிரம்மச்சரியத்தின் உதவியால்தான் மரணத்தை  வென்றார்கள்.
- அதர்வணவேதம்

உன்னைத் தேடி உன் வீட்டிற்கு எவர் வந்தாலும் அவரைப் போகச் சொல்லாதே. இது விரதம்.        
- தைத்திரீய உபநிஷதம்

பிறருக்கு உபகாரம் செய்தவனுக்குப் புண்ணியம் வந்து சேரும். பிறரை துன்புறுத்தியவனுக்குப் பாவம் வந்து சேரும்.    
- மகாபாரதம்

உழைத்துப் பாடுபடுகிறவர்களைக் கண்டால் தெய்வங்களுக்கு மிகவும் பிடிக்கும்.            
-  ரிக் வேதம்

உண்மையே பேசு. தெய்வங்கள் நிச்சயமாக சத்தியத்தைக் கடைப்பிடித்து ஒழுகுகின்றன.  அவை சத்தியத்தால்தான் புகழ் பெறுகின்றன. உண்மையை உரைக்கும் வித்துவானும் புகழ் பெறுகிறான்.
-  சதபதப் பிராம்மணம்

எல்லா உயிர்களும் என்னை நண்பனாகக் கருதட்டும். நானும் எல்லா உயிர்களையும் என் நண்பனாகக் கருதுவேனாக!
-  யஜுர்வேதம்

தேரின் உருளை பல திசைகளிலும் சுழன்று செல்வது போன்று, செல்வமும் பலரிடம் போவதும் வருவதுமாக இருக்கிறது. அது என்றும் ஒரே மனிதனிடமோ ஒரே இடத்திலோ நிலைத்திருப்பதில்லை.
- ரிக் வேதம்

சத்தியம் என்ற ஓடம் தர்மாத்மாவைக் கரையேற்றுகிறது.
- யஜுர்வேதம்

அந்நியனோ நம்மவனோ, உற்றார் உறவினனோ, நண்பனோ பகைவனோ இவர்களில் எவராக இருப்பினும் ஆபத்தில் சிக்கியிருந்தால், அவர் துன்பப்படுவதைப் பார்த்து மனம் பொறுக்காமல் அவர் அதிலிருந்து விடுவிக்க முற்படுவதே தயை அல்லது கருணை எனப்படும்.
- அத்ரி ஸ்மிருதி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.