எது எதனால் ஏன் ஏற்படுகிறது?
நவீன யுகத்தில் நவீன கண்டுபிடிப்புகளாலும் கணித்திட முடியாத பெருமழை, பெருவெள்ளம்,


நவீன யுகத்தில் நவீன கண்டுபிடிப்புகளாலும் கணித்திட முடியாத பெருமழை, பெருவெள்ளம், புயல், சுனாமி, சூறாவளி, நிலநடுக்கம், காட்டுத்தீ முதலிய இயற்கை பேரிடர்கள், பேரழிவுகள் தீரா நோய் ஏற்பட என்ன காரணம்? எண்ணி பார்ப்போம்.
ஒரு சமுதாயத்தில் ஓர் ஊரில் ஒரு நாட்டில் ஒரு நாட்டின் சில பகுதிகளில் மானக்கேடான செயல்கள் பகிரங்கமாக நிகழ்வது தாவூன் என்னும் வாந்தி பேதியும் பல நோய்களும் பரவுவதற்குக் காரணம். குறைத்து அளப்பதும் நிறுப்பதும் பஞ்சத்தையும் கொடுங்கோல் ஆட்சியையும் கொண்டு வரும். ஜகாத் (ஏழை வரி) கொடுக்காமல் ஏமாற்றுவதே மழையில்லாமைக்குக் காரணம். அல்லாஹ்வின் கட்டளைகளை மீறுவது அவனின் திருதூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய வழிமுறையை புறக்கணிப்பது பகையை பரவலாக்கும். இறை கட்டளையை மீறிய ஆட்சி மக்களிடையே கலகத்தையும் சண்டையையும் உண்டாக்கும். வட்டி முதலியவை நில நடுக்கத்திற்கும் நிலத்தில் புதைவதற்கும் விதையாகிறது. ஒரு மனிதன் செய்யும் குற்றத்தால் பாதிக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் மறுமையில் அவனிடம் வழக்குத் தொடுக்கும்.
""மக்களின் கைகள் தேடியதன் காரணமாய் கடலிலும் கரையிலும் அழிவுகள் ஆரம்பமாயின. மக்கள் தீமைகளிலிருந்து விலகுவதற்காக தீமைகளின் தண்டனைகள் சிலவற்றை உலகம் உணரும்படி செய்கிறான் அல்லாஹ்'' என்று இறைமறையின் 30:41 ஆவது வசனம் தெரிவிக்கிறது.
ஆதம் நபியின் ஒரு மகன் காபீல், சகோதரன் ஹாபீலைக் கொன்றதால் கனி தந்த மரங்களில் முட்களும் முளைத்தன. கடல் நீர் உப்பானது. மிருகங்கள் ஒன்றையொன்று கொன்று தின்ன துவங்கின. 220 ஆண்டுகள் அல்லாஹ்வை வணங்கிய பர்ஸீலா என்பவர் மதுவுண்டு மாதோடு தகாது நடந்ததால் அவரின் வணக்கத்திற்குரிய பலன் பறிபோனது.
""பூமியில் நீங்கள் பயணம் மேற்கொண்டு முன்னர் இருந்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைப் பாருங்கள்'' என்று ஏக இறைவன் குர்ஆனின் 30-42 ஆவது வசனத்தில் வழி தவறி நடப்பவரை எச்சரிக்கிறான்.
ஜகாத் (ஏழை வரி) மறுப்பவரின் பொருள்களுக்குப் பாதுகாப்பு இல்லை. ஸதகா (தர்மம்) கொடுக்க மறுப்பவர்களுக்கு உடல் நலம் ஊறுபடும்.
முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் அவர்களைப் பின்பற்றியோருக்கும் கொடுமையான துன்பங்களை இழைத்து மதீனாவிற்குச் செல்ல வைத்த மக்கத்து மக்கள் ஏழு ஆண்டுகள் பஞ்சத்தில் பரிதவித்தனர்.
ஸீஐப் நபியின் நல்லுரைகளை நிராகரித்து அளவையிலும் நிறுவையிலும் நியாயமின்றி வாங்கும் பொழுது அதிகமாக அளந்தும் நிறுத்தும் வாங்கி, விற்கும் பொழுது குறைத்தும் கொடுத்த மதியன் மக்களும் ஸôலிஹ் நபியின் நற்போதனைகளை ஏற்பதாக வாக்குறுதி அளித்து, வாக்குறுதியை வஞ்சகமாக மீறிய கர்வம் கொண்ட ஸமூத் இன மக்களும் பூகம்பம் ஏற்பட்டு வீடுகளில் இருந்தவாறே இறந்ததை இயம்புகிறது திருமறையின் 11- 95 முதலிய வசனங்கள்.
லூத் நபியின் எச்சரிக்கையை மீறி ஓரின வல்லுறவில் ஈடுபட்ட அக்கால மக்களை அல்லாஹ் கல்மாரி பொழிவித்து அழித்ததை அல்குர்ஆனின் 4-80 மற்றும் 84 ஆவது வசனங்கள் அறிவிக்கின்றன. தன் வினை தன்னைச் சுடும் என்பதற்கொப்ப அத்தீயவர்கள் அவர்களின் அக்கிரமங்களால் அழிவைத் தேடி கொண்டனர்.
""இவர்களில் எவருக்குமே நாம் தீங்கிழைக்கவில்லை. எனினும் அவர்களே தங்களுக்குத் தீங்கிழைத்துக் கொண்டனர்'' என்ற திருக்குர்ஆனின் 11-101 ஆவது வசனத்தை உணர்ந்து உண்மையாய் வாழ்ந்து நன்மைகள் செய்தால் நாடும் நலம் பெறும் நாமும் வளமாய் வாழலாம்.
குறிப்பு: 13.10.2014 - இயற்கை அழிவு குறைப்பு நாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...