மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாழ்வில் துன்பங்கள் விலக...

நாம் எப்போதும் தந்தை, மகன், தூய ஆவியை வணங்கித்தான் எந்தச் செயல்களையும் செய்ய ஆரம்பிக்கிறோம்..

News image
Updated On :3 அக்டோபர் 2013, 11:17 am

நாம் எப்போதும் தந்தை, மகன், தூய ஆவியை வணங்கித்தான் எந்தச் செயல்களையும் செய்ய ஆரம்பிக்கிறோம்..

"நம்பிக்கை' ஆவியானவரின் கொடைகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. கொடைகள் ஒன்பது. அவைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். 1) பேச்சு பற்றிய கொடை 2) அறிவு பற்றிய கொடை 3) அருள் அடையாளங்கள் செய்யும் கொடை.

கொடைகள் கடவுளால் வழங்கப்படுகின்றன. அவைகள் பிறருக்கு சென்றடைய வேண்டும். ஒரு நாட்டின் அதிபர் அல்லது பிரதமரிடம் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அது அவர்களின் சொந்தப் பயனுக்காக இல்லை.

அதுபோலத்தான் நம்பிக்கையற்றவர்களுக்கு நம்பிக்கை உணர்வை ஊட்ட வேண்டும்.

தூய ஆவியானவர் எங்கெங்கு பிரசன்னமாகி இருக்கிறாரோ அங்கெல்லாம் நம்பிக்கையும் விடுதலையும் உண்டு. வாழ்வின் துன்பங்களிலிருந்து நிச்சயம் விடுதலை அளிப்பார் அவர்.

அன்று, பவுலும் சீலாவும் இயேசுவைப் பற்றிப் போதித்துக் கொண்டிருந்தபோது, ரோம அரசருக்கு எதிராக அவர்கள் பேசுகிறார்கள் என்று கூறி அவர்களைச் சிறையில் அடைத்தார்கள். சிறையில் அவர்களுக்குக் கால் விலங்கு பூட்டி வைத்திருந்தார்கள். கடுமையான காவல் வேறு இருந்தது.

நள்ளிரவில் பவுலும் சீலாவும் இறைவனைப் புகழ்ந்து பாடி அவரை வேண்டிக் கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. சிறைத்தளத்தின் அடித்தளமே அதிர்ந்தது. கதவுகள் எல்லாம் தானாகத் திறந்து கொண்டன. பவுல் மற்றும் சீலாவின் விலங்குகள் தாமே அறுந்து விழுந்தன.

சிறைக்காவலர் விழித்தெழுந்து வந்து பார்த்தபோது சிறைக்கூடத்தின் கதவுகள் திறந்து கிடப்பதைக் கண்டு கைதிகள் தப்பியோடியிருப்பார்கள் எனக் கருதினர்.

சிறைக்காவல் அதிகாரியோ மனம் நொந்து போய், தனது அரசுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல், தனது வாளை உருவித் தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.

இதை உணர்ந்த பவுல், உரத்த குரலில் அவரைக் கூப்பிட்டு, ""நீர் உமக்குத் தீங்கு எதுவும் செய்து கொள்ளாதீர். நாங்கள் எல்லோரும் இங்கேதான் இருக்கிறோம். தப்பி ஓடவில்லை'' என்றார்.

சிறை அதிகாரி ஒரு விளக்கை எடுத்துக் கொண்டு, நடுங்கியபடியே வந்து அவர்கள் கால்களில் விழுந்து தன்னைக் காப்பாற்றியதற்காக நன்றி செலுத்தினார்.

இதுபோலத்தான் நமது வாழ்வில் ஏற்படும் துன்ப நேரங்களின் போது நாம் கடவுளைப் புகழந்து அவரை வழிபட்டால் வந்த துன்பங்கள் அத்தனையும் சூரியனைக் கண்ட பனி போல விலகி ஓடி விடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.