கங்கையைக் காட்டிலும் தான் சிறப்புப் பெற வேண்டிய தவம் இயற்றிய காவிரித்தாயாருக்கு அருளும் வண்ணம் ஐந்து தலங்களில் காவிரி ஓடும் கரைமருங்கிலே சயனக் கோலத்தில் திருக்கோயில் கொண்டுள்ளார் திருமால். அவை திருவரங்கப்பட்டினம், திருவரங்கம், அப்பாலரங்கம் (கோயிலடி), திருக்குடந்தை (மத்தியரங்கம்), திருஇந்தளூர் (பரிமளரங்கம்) என வழங்கப்படும் பஞ்சரங்க தலங்கள். இவற்றுள் திருஇந்தளூர் (மயிலாடுதுறை அருகில் உள்ளது) சோழநாட்டின் 40 திருப்பதிகளில் 22வதாகப் போற்றப்படும் தலம். திருமங்கையாழ்வார் 10 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்த தலம். வைணவ 108 திவ்ய தேசங்களிலேயே இந்த திவ்ய தேசத்தில்தான் ஐப்பசி மாதம், 1 ஆம் தேதி முதல் கார்த்திகை 1ஆம் தேதி வரை காவேரி உற்ஸவம் நடைபெறுகிறது. மக்கள் கங்கையில் நீராடி பாவங்களைக் கழித்து வருவதால், தனக்கு ஏற்பட்ட பாவம் நீங்க கங்காமாதாவே துலா மாதத்தில் இத்தலத்திற்கு வந்து காவிரியில் நீராடி தன் பாவங்கள் நீங்கப் பெற்றாள் என்று புராண வரலாறு கூறுகிறது.
தற்போது அருள்மிகு பரிமளரங்கநாதர் திருக்கோயிலில் துலாப் பெருந்திருவிழா நடைபெற்று வருகிறது. நவ: 15ஆம் தேதி (இன்று, 8ஆம் நாள் திருவிழா) வெண்ணைத் தாழி சேவையில் காவேரி மண்டபத்தில் எழுந்தருளுதலும், நவ: 16ஆம் தேதி காலை பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளுதலும், மதியம் காவிரி மண்டபத்தில் எழுந்தருளி தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.
தகவலுக்கு: 04364 - 223330
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


