வழிபாடு சிறப்பு மிக்க திருக்கழுக்குன்றம் தலத்திலிருந்து கல்பாக்கம் செல்லும் சாலையில் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அனுபுரம் என்ற ஊரில் இறங்கி குடிபேரம்பாக்கம் ருத்ரேசுவரர் திருக்கோயிலை அடையலாம். இவ்வூரின் வடகிழக்கு மூலையில் இரண்டு சிவாலயங்கள் அமைந்துள்ளன.
ருத்ரேசுவரர் கோயிலில் காலப்போக்கில் சரியாக வழிபாடு நடைபெறவில்லை. இதனால் கோயில் இடிந்து, சிவலிங்கம் புதைந்த நிலையில் பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது.
தற்போது இப்பகுதி மக்கள் கோயிலுக்கு திருப்பணி செய்ய விரும்பி சிறப்பான முறையில் புதுப்பித்துக் கட்டியுள்ளனர். கருவறை, அர்த்த மண்டபம், முன் மண்டபம் என்ற அமைப்புடன் கோயில் விளங்குகிறது. கருவறையில் இறைவன் ருத்ரேசுவரர் அழகிய சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அம்மன் சந்நிதி தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது.
நந்தி மண்டபம், பரிவார ஆலயங்கள் ஆகியவற்றில் திருப்பணி முடியவில்லை. திருக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் இன்னும் செய்யப்படவில்லை. அதற்கான முயற்சிகள் ஊர் மக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோயிலின் முன்பு உள்ள திருக்குளத்தை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. கோயிலைச் சுற்றி பூஞ்செடிகள், வில்வமரம் போன்றவை வளர்க்கப்படுகின்றன.
இவ்வூர் குடிபேரம்பாக்கம் என அழைக்கப்படுகிறது. கோயிலை "குடி' என்று தெலுங்கில் அழைப்பது வழக்கம். தமிழில் "தளி' எனக் குறிப்பிடுவர். திருக்கோயில்கள் நிறைந்த இவ்வூர் முன்பு தளிபெரும்பாக்கம் என்று அழைக்கப்பட்டதை இவ்வூருக்கு அருகில் உள்ள வீராபுரம் சிவன் கோயில் கல்வெட்டினால் அறிய முடிகிறது.
இக்கோயிலுக்கு கிழக்கே அருகில் மற்றொரு சிவன் கோயிலும் உள்ளது. ஆனால் இக்கோயில் மிகவும் இடிந்த நிலையில் காணப்படுகிறது. வழிபாட்டில் இருந்த சிவலிங்கத்தை முன் மண்டபத்தில் வைத்துள்ளனர். அம்பாள் சிற்ப வடிவம் உடைந்துபோன நிலையில் பாதம் மட்டுமே உள்ளது.
இக்கோயிலில் வழிபாட்டில் இருந்த விநாயகர், பைரவர், அன்னபூரணி வடிவங்களை தற்பொழுது கிராம தேவதை கோயிலில் வைத்து வழிபடுகின்றனர். இக்கோயிலின் நுழைவு வாயிலில் தெலுங்கு கல்வெட்டும், அருகில் அப்பர் பெருமானின் புடைப்புச் சிற்பமும் காணப்படுகிறது. மேலும் முன் மண்டபத்தில் காணப்படும் கல்வெட்டுகளினால் இக்கோயிலின் இறைவன் பெயர் ஆட்கொண்ட நாயனார் என்பதை அறிய முடிகிறது. மிகவும் இடிந்த நிலையில் காணப்படும் இக்கோயில், கால வெள்ளத்தினால் கரைந்து விடாமல் இருக்க திருப்பணி செய்ய வேண்டிக் காத்திருக்கிறது.
தகவலுக்கு: 97903 49138
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

