எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கல்வி தரும் சம்பந்தர் ஆலயம்!

திருநெல்வேலியில், அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலுக்கு மேற்கே அரை கிலோ மீட்டர் தொலைவில் சேரன்மகாதேவி சாலையில் அமைந்துள்ளது

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:45 pm

எஸ். நாராயணன்

திருநெல்வேலியில், அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலுக்கு மேற்கே அரை கிலோ மீட்டர் தொலைவில் சேரன்மகாதேவி சாலையில் அமைந்துள்ளது அருள்மிகு திருஞான சம்பந்த மூர்த்தி திருக்கோயில். இவர் பெயராலேயே இக்கோயில் அமைந்துள்ள பகுதி "சம்பந்தர் தெரு' என அழைக்கப்படுகிறது.
 நின்றசீர் நெடுமாற பாண்டிய மன்னன் எழுப்பிய நெல்லையப்பர் கோவிலுக்கு வந்த சம்பந்தர் பெருமான் சிவபெருமானை போற்றிப் பதிகம் பாடினார். பின் அங்கிருந்து குற்றாலத்து குருந்தமரத்து சிவனாரை காண விரும்பி பயணம் மேற்கொண்டார். நடக்கின்ற வழியில் கம்பா நதிக்கரையில் (காலப்போக்கில் இந்த நதி இருந்ததற்கான சுவடுகள் மறைந்துவிட்டன) அவர் தங்கினார். அந்த இடமே தற்போது திருஞானசம்பந்த மூர்த்தி திருக்கோயிலாக
 விளங்குகிறது.
 பனிரண்டாம் நூற்றாண்டில், இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டிய மன்னரால் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கே திருஞான சம்பந்தர் தங்கியிருந்த தகவல் நெல்லையப்பர் கோயில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
 இந்தியாவிலேயே திருஞான சம்பந்தரை மூலவராக கொண்ட ஒரே திருக்கோயில் இது என்பது கூடுதல் சிறப்பு.
 இக்கோயிலின் மற்றொரு சிறப்பு மூலவரான திருஞான சம்பந்த சுவாமிக்கு அருகில் நெல்லையப்பருக்கும், காந்திமதி அம்பாளுக்கும் தனித்தனியே சந்நிதி அமைந்துள்ளதுதான்.
 கோயில் பிராகாரத்தை வலம் வரும் பாதையில் நெல்லையப்பர் திருக்கோயில் பிராகாரத்தில் அமைந்துள்ளபடியே கன்னிவிநாயகர், சுரதேவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள், வள்ளி தெய்வானையுடன் கல்யாண முருகன், தட்சிணாமூர்த்தி, லக்ஷ்மி, சனீஸ்வர பகவான், பைரவர், சண்டிகேஸ்வரர், சரஸ்வதி மற்றும் சூரியன், சந்திரன், ஐம்பொன்னால் ஆன நடராஜர் ஆகியோருக்கும் தனித்தனியே சிறிய சந்நிதிகள் உள்ளன.
 இக்கோயிலில் தினசரி பூஜைகளும், பல்வேறு விழாக்களும் நடைபெறுகின்றன. அதில் ஒன்றுதான் திருஞான சம்பந்தர் ஞானப்பால் அருந்திய நிகழ்ச்சியைக் கொண்டாடும் விழா.
 ஆண்டுதோறும் ஐப்பசி மாதம், திருநெல்வேலியில் நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். அன்றைய தினம் அம்பாள் பவனியாக திருஞானசம்பந்தர் கோயிலுக்கு வந்து சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் வைபவம் கோலாகலமாக நடை
 பெறுகிறது.
 இக்கோயிலில் திருஞான சம்பந்தரை மனமுருகி வேண்டிக் கொண்டால் தடைபட்ட திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். இத்தகைய பெருமைகள் வாய்ந்த இக்கோயிலின் திருப்பணி பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது.
 குறிப்பாக சம்பந்தர், நெல்லையப்பர், காந்திமதியம்மன் சந்நிதி விமானங்களுக்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2013ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று
 வருகின்றன.
 மேலும் தகவலுக்கு 94893 02739.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.