10 Dec, 2025 Wednesday, 01:31 PM
The New Indian Express Group
தமிழ்மணி
Text

புலமை கனிந்த போற்றிப் பாடல்

PremiumPremium

பத்தொன்பதாம் நூற்றாண்டைத் தம் புலமைத் திறத்தால் ஆண்டவர் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை.

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On30 Nov 2025 , 5:02 PM
Updated On30 Nov 2025 , 5:02 PM

Listen to this article

-0:00

By தெ. ஞானசுந்தரம்

Vishwanathan

பத்தொன்பதாம் நூற்றாண்டைத் தம் புலமைத் திறத்தால் ஆண்டவர் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. அவருக்குச் சைவமும் தமிழுமே மூச்சு. மறைவதற்கு ஓரிரு நாள்களுக்கு முன்புவரை கவிதை பாடியவர். எந்தக் கருத்தை அறிந்தாலும் அதை மேலும் அழகுபடுத்திப் பாடுவது அவருக்கு இயல்பு. நலிவுற்றுப் படுக்கையில் கிடந்த அவரைக் காண வந்த கஞ்சனூர் அக்கினிலிங்க சாஸ்திரி, சிவானந்த லகரியில் உள்ள 'ஸதா மோஹ அடவ்யாம்' என்னும் பாடலை விளக்கினார்.

'சிவனே! எங்கும் நிறைந்தவனே! தலைஓடு ஏந்திப் பிச்சைக்குச் செல்பவனே! என் மனம் என்னும் குரங்கு எப்போதும் மோகம் என்னும் காட்டில் திரிகிறது. பெண்களின் மார்பகமாகிய மலைகளில் கூத்திடுகிறது. ஆசை என்னும் கிளைகளில் கண்டபடி சுற்றுகிறது.

அதை அன்பென்னும் கயிற்றால் கட்டி உன் வசம் ஆக்கிக்கொள்' என்பது அப்பாடலின் கருத்து, அதைக் கேட்டு மகிழ்ந்த மீனாட்சிசுந்தரம் பிள்ளை, உடனே அந்தப் பாட்டின் இறுதிப் பகுதியை,'தில்லையில் ஆடும் பெருமானே! மனக் குரங்கினைப் பக்தி என்னும் கயிற்றால் கட்டி அதையும் உன்னோடு சேர்த்துக்கொண்டு பிச்சைக்குச் செல்க' என்று சிறிது மாற்றி மெருகூட்டி,

மோகமாம் அடவி திரிந்துஅரி வையர்தம்

முலைக்குவட் டிடைநடம் ஆடித்

தாகமார் ஆசைத் தருக்குலம் தோறும்

தாவுமென் புன்மனக் குரங்கைப்

பாகமார் பத்தி நாண்கொடு கட்டிப்

பலிக்குநீ செல்கயான் கொடுத்தேன்

ஏகநா யகனே! தில்லையில் ஆடும்

இறைவனே! எம்பெரு மானே.

என்று பாடினார். இத்தகைய பிள்ளையவர்கள் சேக்கிழாரிடத்தும் சிவஞான முனிவரிடத்தும் ஈடுபாடு கொண்டவர். இதற்குச் சான்று, உறையூர்ப் புராணத்தில் திருநாவுக்கரசர் மீது அவர் பாடியுள்ள போற்றிப் பாடல்.

சேக்கிழார் பெரிய புராணத்தில் நான்கு இடங்களில் திருநாவுக்கரசரின் தோற்றப் பொலிவைப் பாடியுள்ளார்.

அப்பெருமான் திருவதிகையிலும், திருவாரூரிலும் எழுந்தருளிய அழகை முறையே,

தூய வெண்ணீறு துதைந்த பொன் மேனியும்

தாழ்வடமும்

நாயகன் சேவடி தைவரும் சிந்தையும்

நைந்துருகிப்

பாய்வது போல் அன்பு நீர்பொழி கண்ணும்

பதிகச் செஞ்சொல்

மேயசெவ் வாயும் உடையார் புகுந்தனர்

வீதியுள்ளே.

என்றும்,

மார்பாரப் பொழி கண்ணீர் மழைவாரும்

திருவடிவும் மதுர வாக்கில்

சேர்வாகும் திருவாயில் தீந்தமிழின்

மாலைகளும் செம்பொன் தாளே

சார்வான திருமனமும் உழவாரத்

தனிப்படையும் தாமும் ஆகிப்

பார்வாழத் திருவீதிப் பணிசெய்து

பணிந்தேத்திப் பரவிச் செல்வார்

என்றும் பாடியுள்ளார். பாண்டிய நாட்டுப் பதிகளை வணங்கியதை,

ஒழுகியகண் பொழி புனலும் ஓவாது

சிவன்தாள்கள்

தழுவியசிந் தையில்உணர்வும்

தங்கியநீர் மையில்சரித்தார்

என்கிறார்.

திருஞானசம்பந்தர் புராணத்தில், அவரைக்

காண சீர்காழியை அடைந்த அப்பரின் கோலத்தை,

சிந்தை இடையறா அன்பும் திருமேனி

தன்னில் அசைவும்

கந்தை மிகையாம் கருத்தும் கைஉழவாரப்

படையும்

வந்திழி கண்ணீர் மழையும் வடிவில்

பொலிதிரு நீறும்

அந்தமி லாத்திரு வேடத் தரசும்

எதிர்வந் அணைய

என்று குறித்துள்ளார்.

இப்பாடல்களின் அழகில் திளைத்தவர் சிவஞான முனிவர் என்பது அவரது காஞ்சிப் புராணத்தில் உள்ள திருநாவுக்கரசர் துதியால் தெளிவாகிறது.

அவர் சேக்கிழாரின் சொற்களான இடையறா அன்பினை இடையறாப் பேரன்பாகவும், அன்புநீர் பொழி கண்ணீர், மழைவாரும் திருவடிவு இவற்றை மழைவாரும் இணைவிழியாகவும் உழவாரத் தனிப்படையை உழவாரத் திண்படையாகவும், நாயகன் சேவடி தைவரும் சிந்தை, செம்பொன் தாளே சார்வான திருமனம் என்பனவற்றைச் 'சிவபெருமான்

திருவடிக்கே பதித்த நெஞ்சாகவும், 'பதிகச் செஞ்சொல் மேய செவ்வாய், 'மதுர வாக்கில் சேர்வாகும் திருவாயில் தீந்தமிழின் மாலைகள் ஆகியவற்றை ஞானப் பாடல் தொடையறாச்

செவ்வாயாகவும் சித்திரித்துள்ளார்.

இடையறாப் பேரன்பும் மழைவாரும்

இணைவிழியும் உழவா ரத்திண்

படையறாத் திருக்கரமும் சிவபெருமான்

திருவடிக்கே பதித்த நெஞ்சும்

நடையறாப் பெருந்துறவும் வாகீசப்

பெருந்தகைதன் ஞானப் பாடல்

தொடையறாச் செவ்வாயும் சிவவேடப்

பொலிவழகும் துதித்து வாழ்வாம்.

என்பதே அப்பாடல்.

இவ்விருவருடைய பாடல்களிலும் தோய்ந்த பிள்ளை அவர்கள் சேக்கிழார் பாடல்கள் நான்கிலும் பயிலும் சொற்களோடு, முனிவரின் விருத்தத்தில் பயிலும் 'இடையறாப் பேரன்பு' என்பதை 'இடையறா அன்பு' என்றும் நடையறாப் பெருந்துறவு என்பதை, முழுத் துறவு என்றும் குறித்துள்ளார். மேலும், சிவன் பிறவா யாக்கைப் பெரியோன் என்பதைக் காட்டும் வகையில், 'தந்தையொடு தாயும் இலான்' என்று குறித்து மெருகூட்டித் தம் பாடலைச்

செழுமைப்படுத்தியுள்ளார்.

கந்தைமிகை யாம்கருத்தும் கைஉழவாரப்

படையும் கவின்வெண் ணீறும்

சிந்தைஇடை யறாஅன்பும் சிவஞானம்

பழுத்தொழுகு செய்ய வாயும்

தந்தையொடு தாயிலான் திருவடிதை

வருமனமும் தாரைக் கண்ணும்

நிந்தையறு முழுத்துறவும் உடையபிரான்

அடிபணிந்து நீடு வாழ்வாம்.

என்னும் சொல்லோவியம் மீனாட்சி

சுந்தரம் பிள்ளையின் கனிந்த புலமையைக் காட்டும் போற்றிப் பாடல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
வீடியோக்கள்

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25
வீடியோக்கள்

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு
வீடியோக்கள்

”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH
வீடியோக்கள்

புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25
வீடியோக்கள்

நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25

தினமணி வீடியோ செய்தி...

8 டிச., 2025
கொள்ளுத் துவையல்
வீடியோக்கள்

கொள்ளுத் துவையல்

தினமணி வீடியோ செய்தி...

6 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023