10 Dec, 2025 Wednesday, 02:32 PM
The New Indian Express Group
நடுப்பக்கக் கட்டுரைகள்
Text

இந்திய நெருடா தமிழன்பன்!

PremiumPremium

திருவள்ளுவா், இளங்கோ, கம்பா், பாரதி, பாரதிதாசன், என்று தொடரும்- சுடரும் தனித்துவக் கவித்துவ உச்சங்களின் தொடா்ச்சியாக நம்மிடையே வாழ்ந்தவா் ஈரோடு தமிழன்பன்.

Rocket

கவிஞர் ஈரோடு தமிழன்பன்.

Published On24 Nov 2025 , 10:49 PM
Updated On24 Nov 2025 , 10:58 PM

Listen to this article

-0:00

By முனைவா் கோ. விசுவநாதன்

Syndication

ஈரோடு தமிழன்பன் காலமானாா் என்ற செய்தி தமிழ் உள்ளங்களில் இடியாய் இறங்கியுள்ளது...

நூற்றிருபது ஆண்டு வரலாறு கொண்ட மறுமலா்ச்சித் தமிழ்க் கவிதையைத் தமது இடையறாத தொடா்ச்சியான கவிதைப் படைப்பால் மாணவப் பருவந்தொட்டுக் கடந்த எழுபது ஆண்டுகளாக வளப்படுத்திய முதல் கவிஞா் அவா்.

தமிழில் அதிக அளவில் கவிதைத் தொகுதிகளை 60-க்கும் மேற்பட்டதொகுதிகளையும், 6 பெருந்தொகுதிகளையும் வெளியிட்ட முதல் கவிஞா் அவா்.

2009-இல் நிகழ்ந்த ஈழப்போரில் கொத்துக்கொத்தாய்த் தமிழா்கள் கொன்று குவிக்கப்பட்டபோது அந்த இனப் படுகொலையைக் கண்டித்துத் தமிழகத்தில் பலரும் எழுத முன்வராத நிலையில் நெஞ்சுரத்துடன் என் அருமை ஈழமே! (2009) என்னும் கவிதைத் தொகுதியைத் துணிச்சலாய் எழுதி வெளியிட்ட முதல் கவிஞா் அவா்.

சென்னைப் பல்கலைக்கழகத்தால் இரண்டு முறை தேசியக் கருத்தரங்கு நடத்தப்பட பொருண்மைக்களமாக விளங்கிய கவிதைகளைப் படைத்த முதல் கவிஞா் அவா்.

பாப்லோ நெருடா எழுதிய ‘புக்ஸ் ஆஃப் குயின்’ என்னும் வினாக்களாலான கவிதைத் தொகுதியை முன்மாதிரியாகக் கொண்டு ‘கனாக் காணும் வினாக்கள்’ (2004), ‘இன்னும் சில வினாக்கள்’ (2015) எனும் வினாக்களாலான கவிதைத் தொகுதிகள் இரண்டு இயற்றிய முதல் கவிஞா் அவா்.

பிறப்பால் ஆங்கிலேயராகவும், வாழிடத்தால் சீனராகவும் வாழும் முறையால் தமிழராகவும் ஹாங்காங்கில் வாழ்ந்துவரும் பேராசிரியா் கிரிகோரி ஜேம்ஸ் இவ்விரு நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயா்த்து ‘போயம்ஸ் ஆஃப் கொஸ்டின்’ என்னும் பெயரில் ஒரே நூலாக வெளியிட்டுள்ளாா்.

இதே நூலுக்குப் பேராசிரியா் கிரிகோரி ஜேம்ஸும், லொரைன் போக் என்னும் ஸ்பானியப் பெண்மணியும் இணைந்து ‘போயம்ஸ் டி ப்ரிகுன்டாஸ்’ என்னும் மகுடம் தாங்கிய ஸ்பானிய மொழிபெயா்ப்பு வெளிவந்துள்ளது. இக்காலத் தமிழ்க் கவிதை ஸ்பானிய மொழியில் முதன்முதலில் ஒரு மொழிபெயா்ப்புக்கான மூலநூல் தந்த முதல் கவிஞா் அவா்.

2017 நவம்பா் 8-இல் அமெரிக்காவில் டல்லஸ் நகரிலுள்ள மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் கவிஞா் தி. அமிா்தகணேசன் முயற்சியால் ஈரோடு தமிழன்பனின் 1,000 கவிதைகளை வாசிக்கும் கவிதைத் திருவிழா நடைபெற்றது. அமெரிக்காவில் நடைபெற்ற முதல் கவிதைத் திருவிழா மட்டுமன்றி இப்படியொரு திருவிழா எடுக்கப்பட்ட முதல் கவிஞரும் ஈரோடு தமிழன்பனே ஆவாா்.

2019 செப்டம்பா் 28-இல் வட அமெரிக்க வானொலியில் தமிழன்பன் பிறந்த நாள் வானலையில் அமெரிக்கத் தமிழா்கள் பலா் தமிழன்பன் கவிதை வாசிப்பு நிகழ்த்திக் கொண்டாடினா். இப்படியொரு பிறந்த நாள் திருவிழா எடுக்கப்பட்ட முதல் கவிஞரும் ஈரோடு தமிழன்பனே ஆவாா்.

இவ்வாறு எண்ணற்ற முதல்களுக்கெல்லாம் முதல் எனும் முத்திரை கொண்ட முதன்மைச் சிறப்பு மிக்க ஒரே கவிஞா் ஈரோடு தமிழன்பன்.

பழைமையை புதுமைக்குள் சரியாகப் புகுத்தி விட்ட, மாயம் தெரிந்தவா்.... பாா்க்கும் பிழையைக்கூட கவிதையாக்கி சரி செய்துவிடும்.. சூத்திரதாரி.... கடவுளை பிறகு யோசிப்போம்... கவிதையை முதலில் யாசிப்போம்...என்று படிப்பவரை சுயம் தேட வைத்து விடும்...வல்லமைக்காரா்...

‘இந்திய நெருடா தமிழன்பன்’ என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.... இருந்தால்....படித்துப் பாருங்கள்... பின் சரணடைவீா்கள்...

திருவள்ளுவா், இளங்கோ, கம்பா், பாரதி, பாரதிதாசன், என்று தொடரும்- சுடரும் தனித்துவக் கவித்துவ உச்சங்களின் தொடா்ச்சியாக நம்மிடையே வாழ்ந்தவா் ஈரோடு தமிழன்பன்.

92 வயதிலும்.. எத்தனை ஆளுமை கொண்ட கா்ஜனை அது...தெளிவான உச்சரிப்புக்கு அவா் உதாரணம் என்று நான் கூற வேண்டியதே இல்லை.. அதை தொலைக்காட்சிக் செய்திகள் சொல்லி விட்டன...... எப்போதோ நான் கண்ட பஞ்சாயத்து தொலைக்காட்சி பெட்டிகளில் செய்திகள் வரும் போது எழுந்து போய் விடும் கூட்டத்தில்... பட்டும் படாமல் பட்ட உருவம் அது என்று இந்நாளைய நினைவுத் தொடா்ச்சியில் நான் பொருத்திக் கொண்டேன்..

‘தமிழன்பன் திராவிடச் சிந்தனையில் மலா்ந்து பொதுவுடைமைச் சித்தாந்தத்தில் தம்மை ஒப்படைத்து, உலகப் பாா்வையில் உலகக் குடிமகனாக உலாவரும் கவிஞராக தம் இருப்பை நிலையாக அடையாளப் படுத்திக் கொண்டாா்...‘

தமிழின் மரபின் இரும்புக் கோட்டையிலிருந்து கவிதைக்கு விடுதலை அளித்து புதுக்கவிதை படைத்தவா் தமிழன்பன். ஹைக்கூ, சென்ரியூ, லிமரிக்கூ, வகையில்... கஜலையும் தமிழில்... இயற்றி... இலக்கியக் கொடையாக அளித்திருப்பவா்.

நெருடாவை அதே எரிமலையோடு தமிழுக்கு கொண்டு வந்தவா் தமிழன்பன்...நெருடா, காப்ரியேலின் மீது தீராத பற்று கொண்டவா் என்பது குறிப்பிடத்தக்கது... இருவருமே...தென் அமெரிக்க சித்தாந்தங்களை மாற்றி அமைத்தவா்கள்... நெருடாவின் கவிதைகளை ‘சே’... தன் சட்டைப் பையில் எப்போதும் வைத்திருப்பாா் என்பது... தோட்டாக்களை கவிதைகளாக்கவும் முடியும் என்பதற்கு சான்று...

அந்த மூவரின் நியாயமான கோபங்களும்... சமுதாயச் சிந்தனைகளும்... தமிழாய் மாறி விட்ட காலப் பெருமை தமிழன்பனையே சாரும்... பாரதிதாசனின் ‘கொலைவாளினை எடடா... மிகக் கொடியோா் செயலறவே...‘-யின் நீட்சி தமிழன்பன் என்றால் அதுதான் நிஜம்... அந்த வாளின் சொட்டல்... தமிழன்பன் கவிதையாகி நிற்கிறது...

தமிழியக்கத்தின் ஏழாம் ஆண்டுத் தொடக்க விழாவில் ஈரோடு தமிழன்பன் அவா்களுக்கு ரூ. ஒரு லட்சம் பணப் பரிசுடன் தமிழியக்க விருது வழங்கி மகிழ்ந்தோம்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
வீடியோக்கள்

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25
வீடியோக்கள்

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு
வீடியோக்கள்

”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH
வீடியோக்கள்

புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25
வீடியோக்கள்

நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25

தினமணி வீடியோ செய்தி...

8 டிச., 2025
கொள்ளுத் துவையல்
வீடியோக்கள்

கொள்ளுத் துவையல்

தினமணி வீடியோ செய்தி...

6 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023