10 Dec, 2025 Wednesday, 01:47 PM
The New Indian Express Group
தமிழ்மணி
Text

இந்த வாரம் கலாரசிகன் - 30-11-2025

PremiumPremium

மதுரை மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழாவுக்குமான முன்னேற்பாடுகளில் என்னைப்போலவே பலரும் முனைப்புடன் இறங்கி விட்டிருக்கிறார்கள்.

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On30 Nov 2025 , 5:10 PM
Updated On30 Nov 2025 , 5:10 PM

Listen to this article

-0:00

By இணையதளச் செய்திப் பிரிவு

Vishwanathan

இன்றிலிருந்து இன்னும் சரியாகப் பத்து நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில், எட்டயபுரம் பாரதியார் விழாவுக்கும், மதுரை மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழாவுக்குமான முன்னேற்பாடுகளில் என்னைப்போலவே பலரும் முனைப்புடன் இறங்கி விட்டிருக்கிறார்கள். கடல் கடந்து ஆஸ்திரேலியாவில் 'பாரதி உலா' நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்திய உரத்த சிந்தனை பாரதி அன்பர்கள் இந்த ஆண்டும் வழக்கம்போல எட்டயபுரம் வருவார்கள் என்று நினைக்கிறேன்.

அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கமும், திருவையாறு பாரதி இயக்க நண்பர்கள் சந்திரசேகரன், ராஜராஜன், பிரேமசாயி, குமணன் உள்ளிட்டோரும் எப்போதும்போல மகாகவி பாரதியை அவரது பிறந்த நாளில் வணங்கிப் போற்ற வருவார்கள்; கம்பத்தில் இருந்து, கடந்த ஆண்டைவிட அதிகம்பேர் வரப்போவதால் பேருந்தை ஒப்பந்தம் செய்திருப்பதாகக் கவிஞர் பாரதன் உற்சாகத்துடன் அழைத்துத் தெரிவித்தார்.

தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றம், தமுஎக சங்கம் உள்ளிட்ட அமைப்பினரும் வழக்கம்போல மணிமண்டபத்தில் குழுமுவார்கள்; புத்தகங்களை வெளியிடுவார்கள்; சிறப்புரை ஆற்றுவார்கள். அதையெல்லாம் பார்த்தும் கேட்டும் மகிழும் வாய்ப்புக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ப்பெண்ணாத்தூர் பாரதி}ஜெயராமன் தமிழ் மன்றம் கடந்த ஆண்டு முதல், பாரதியாரின் பிறந்த நாளன்று எட்டயபுரத்தில் பாரதி அன்பர் ஒருவருக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது. கவிஞர் ஜெயபாஸ்கரன் ஒருங்கிணைக்கும் அந்த விழாவை அந்த அமைப்பின் நிறுவனர் } தலைவர் செந்தில் பிரசாத் புரவலராக இருந்து நடத்துகிறார்.

இந்த ஆண்டு அவர்கள் விருதுக்குத் தேர்ந்தெடுத்திருக்கும் விருதாளர், எனது நண்பர் மட்டுமல்ல, நாடறிந்த கவிஞர். கவிஞர் என்று சுருக்கிவிட முடியாத

ஓவியக் கவிஞர். கவியரசர் கண்ணதாசன் நடத்திய 'கண்ணதாசன்' இதழில் உதவி ஆசிரியராகவும், வடிவமைப்பாளராகவும் பணியாற்றிய பெருமைக்கு உரியவர்.

கவிஞர் அமுத பாரதியைவிட அந்த விருதுக்குப் பொருத்தமானவரும், தகுதியானவரும் இருக்க முடியாது.

டிசம்பர் 11}ஆம் தேதி உங்களை நானும், என்னை நீங்களும் சந்திக்கும் அந்த நாளுக்காகவும், நாம் அனைவரும் இணைந்து தமிழன்னையின் தவப்புதல்வன் மகாகவி பாரதியாரை அவரது பிறந்த நாளில் நினைவுகூர்ந்து வாழ்த்தும் தருணத்துக்காகவும் காத்திருப்போம்!

ஏறத்தாழ ஒரு மாதமாக, நீங்கள் எப்போது அலுவலகம் வருவீர்கள், சந்திக்க வேண்டும் என்கிற வேண்டுகோளுடன் என்னைத் துரத்தி, ஒருவழியாகப் பிடித்து விட்டார் சென்னைக் கம்பன் கழகத்தின் துணைச் செயலாளர், நண்பர், வழக்குரைஞர் பால சீனிவாசன். சென்னைக் கம்பன் கழகத் தலைவர் 'நயவுரை நம்பி' டாக்டர். எஸ்.ஜெகத்ரட்சகனைப் பதிப்பாசிரியராகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் 'கம்பன் கலைக்களஞ்சியம்' என்கிற புத்தகத்தை எனக்குத்

தருவதற்காகத்தான் நண்பர் பால சீனிவாசன் அத்துணை சிரமம் எடுத்துக்கொண்டார்.

'எண்ணெழுத்துப் பயின்ற இளம்பருவத்திலேயே எட்டெழுத்துப் பயின்று, இசைபட வாழும் இனிய பேறு பெற்றவன், இப்போது கம்பநாடனைப் போற்றிய கற்றோர்கள் பலரின் கட்டுரைகளைத் தொகுத்து வழங்கும் அரும்பெரும் வாய்ப்பினை அடைந்திருக்கிறேன்' என்கிறது ஜெகத்ரட்சகனின் பதிப்புரை. கம்பனில் மூழ்கி முத்தெடுத்த மூத்த தமிழறிஞர்கள் அத்தனை பேரும், தத்தம் பார்வையில் பதிவு செய்திருக்கும் கம்ப காதை குறித்த கருத்துகள், எழுதியிருக்கும் கட்டுரைகளைத் தேடிப்பிடித்து தொகுக்க டாக்டர். எஸ்.ஜெகத்ரட்சகனுக்குக் கிடைத்த வரம் முனைவர் இராதாகிருஷ்ணன் மாது என்றுதான் சொல்ல வேண்டும்.

800 பக்கங்களுக்கு மேல் நீண்டு விரிந்து நித்திலக் கோவையாய் நிரம்பிக் கிடக்கும் 133 கட்டுரைகளும் காலத்தால் அழிந்துவிடாமல் காப்பாற்றுவதற்காகவே தொகுக்கப் பட்டிருக்கிறது இந்தக் கலைக்களஞ்சியம் என்றுதான் சொல்ல வேண்டும். தமிழறிஞர்களால் தமிழறிஞர்கள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட 133 ஆளுமைகள் கம்பன் என்னும் மகா சமுத்திரத்தில், அவரவருக்குக் கிடைத்த முத்துக்களை அள்ளி எடுத்துவந்து வார்த்தைகளாக்கிப் படைத்திருக்கிறார்கள். அதை நமக்குத் தொகுத்துத் தந்திருக்கிறார்கள் டாக்டர். எஸ்.ஜெகத்ரட்சகனும், மாதுவும்.

'ஏடுசேர்த்த எல்லா எழுத்தாலும் எம்தமிழ்க்குப் பீடுசேர்த்த எங்கள் பெருமானே; கூடு சேர்த்த தேனைக் கவிதைக்குள் தேக்கிவைத்த கம்பநாடா; ஊனை உருக்கும் பா உனது' என்று கவிஞர் வாலியும், 'எத்திக்கும் போற்றும் இராமன் திருக்கதையைத் தித்திக்கும் செந்தமிழில் செய்தளித்து, நித்தமும் அம்புவியில் மக்கள் அமுதம் அருந்தவைத்த கம்பன் கவியே கவி' என்று 'கவிமணி' தேசிக விநாயகம் பிள்ளையும், 'பத்தாயிரம் கவிதை முத்தாக அள்ளிவைத்த சத்தான கம்பனுக்கு ஈடு இன்னும் வித்தாக வில்லை என்று பாடு; காலமெனும் ஆழியிலும் காற்று மழை ஊழியிலும் சாகாது கம்பனவன் பாட்டு} அது தலைமுறைக்கு எழுதிவைத்த சீட்டு' என்று 'கவியரசு' கண்ணதாசனும்,

தலையில் தூக்கிக் கொண்டாடிய கம்ப காதையின் அத்தனை பரிமாணங்கள் குறித்தும் தமிழ் ஆளுமைகள் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் எல்லாம் தேடிப்பிடித்துத் தொகுக்கப்பட்டிருக்கும் 'கம்பன் கலைக்களஞ்சியம்' மலைப்பை ஏற்படுத்துகிறது.

சென்னைக் கம்பன் கழகத்தின் வெள்ளிவிழா நிறைவு மலராக மலர்ந்திருக்கும் இந்த அரிய தொகுப்பை முழுமையாகப் படித்து உள்வாங்க ஓர் ஆண்டாவது தேவை. ஆயுள் உள்ள காலம் அசை போடலாம்.

ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் டாக்டர்.ஜெகத்ரட்சகன் தமிழுக்குத் தந்த கொடை 'பிரபந்தங்களின் திரட்டு' என்றால், இப்போது சென்னைக் கம்பன் கழகத்தின் சார்பில் அவர் வழங்கியிருக்கும் காலம் கடந்து நிற்கும் பொக்கிஷம் 'கம்பன் கலைக்களஞ்சியம்' !

வயலும் வாழ்வுமாக இருந்ததுபோய், நகர்மயம் என்கிற பெயரில் கான்கிரீட் காடுகளாக மாறிவிட்டன நகரங்கள். அதைக் கவிஞர் மு.கீதாவின் இந்தக் குறும்பாவை விடச் சிறப்பாக நையாண்டி செய்ய முடியாது.

கட்டடக் கூண்டுக்குள்

மனிதப் பறவைகள்

நகரம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
வீடியோக்கள்

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25
வீடியோக்கள்

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு
வீடியோக்கள்

”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH
வீடியோக்கள்

புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25
வீடியோக்கள்

நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25

தினமணி வீடியோ செய்தி...

8 டிச., 2025
கொள்ளுத் துவையல்
வீடியோக்கள்

கொள்ளுத் துவையல்

தினமணி வீடியோ செய்தி...

6 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023