தெய்வப் புலவர் திருவள்ளுவர், செய்ந்நன்றியைப் பற்றிக் கூறுமிடத்து
எந்நன்றி கொன்றார்க்கும்
உய்வுண்டாம்; உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
என்று கூறுகிறார். இந்தக் கூற்று மானிடவர்க்கு மட்டுமின்றி, கூற்றுவனுக்கும் (எமனுக்கும்) பொருந்திவரும் போலும்! ஆம், அப்படித்தான் புறம் "அறம் ' பாடுகிறது.
தகரூர்ப் போரில் கடும் போரிட்ட மன்னவன் எழினி போர்க்களத்தில் வீழ்ந்து வீரமரணம் எய்தினான். அங்குச் சென்ற அரிசில் கிழார் எனும் புலவர் மன்னவனின்உடலைப் பார்த்துக் கதறி அழுகிறார்.
ஈவு இரக்கமன்ற செய்ந்நன்றி கொன்ற கூற்றுவனை, "அறனில் கூற்றுவனே' என்று முன்னிலை விளியில் எமதர்மராஜனைப் பலபடச் சாடுகிறார்.
உலகியல் துன்பத்தையும் உள்ளடக்கிய அப்பாடல் பின்வருமாறு:
ஈன்றோள் நீத்த குழவி போலத்
தன்னமர் சுற்றும்
தலைத்தலை யினையக்
கடும்பசி கலக்கிய இடும்பைகூர்
நெஞ்சமொடு
நோய் உழந்து வைகிய உலகினும்
மிகநனி
நீ இழந்தனையே அறனின் கூற்றம்
வாழ்தலின் வயல்வளம் அறியான்
வீழ்குடி உழவன் வித்து
உண்டாங்கு
ஒருவன் ஆருயிர் உண்ணாய்
ஆயின்
நேரார் பல்லுயிர் பருகி
ஆக்குவை மன்னோ அவன் அமர்
அடுகளத்தே
(புறம் 230)
தாயை இழந்துவிட்ட குழந்தை, தன் சுற்றத்தாரிடம் சென்று பசியால் அழுது வருந்துவது போல, மன்னன் எழினியை இழந்ததால், இந்நாடு முழுவதும் வருந்தி அழுகிறது.
வித்தினை விதைத்து, பயிர் நன்கு விளைந்த பின்பு கிடைக்கப் போகும் வருவாய் பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாத நிலையில், விதைநெல்லையே உண்ணும் அறிவில்லாத உழவனைப் போல நீயும் நடந்து கொண்டாயே கூற்றுவனே! உன் பசியாற இதுநாள் வரை, பகைவர் பலரையும் போர்க்களத்தில் கொன்று, உனக்கு உணவாக்கிய அந்த அரசனையே (எழினி) இன்று இப்போர்க்களத்தில் இறந்துபடச் செய்துவிட்டாயே!.
இதுநாள் வரை உனக்கு மிகுதியாக உணவு (உயிர்) கொடுத்து வந்தவனின் உயிரையே இன்று உணவாக்கிக் கொண்டாய்! நீ அறமில்லாதவன்! அறிவற்றவன்!
ஈண்டு கூற்றுவனயே செய்ந்நன்றி கொன்ற அறமில்லாதவன் என்று புலவர் வசை பாடுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!

தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது!

திருவள்ளூா் நகராட்சியில் நீண்டகால திட்டங்களை நிறைவேற்றம்: திமுக வேட்பாளா்

வாகன பரிசோதனையில் ரூ.2,000, ரூ.10,000 மாதிரி காசோலை புத்தகங்கள் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

