* கோடை காலத்தில் வெயிலில் வெளியே போய்விட்டு வீட்டுக்கு வந்ததும் சிறிது நேரம் கண்களை இறுக மூடிக்கொண்டு காற்றோட்டமான இடத்தில் இருக்க வேண்டும். இப்படிச் செய்வதால் உட்புற சூழ்நிலைக்கு ஏற்ப கண்கள் இயங்கும்.
* கண்கள் சோர்வுற்று உள்ள நேரங்களில் மெல்லிய சல்லாத் துணி ஒன்றைக் கண்களின் மீது போர்த்தி, அதன் மீது அரைத்த அல்லது வட்ட வடிவத் துண்டுகளாக நறுக்கிய புதிய வெள்ளரிக்காயை சிறிது நேரம் வைத்திருப்பதால், கண்கள் புத்துணர்ச்சியும் அழகும் பெரும்.
* இரவு படுக்கைக்குப் போகும் முன்பும் காலையிலும் குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவவேண்டும்.
* நெல்லிக்காயை நனைய வைத்த தண்ணீரில் கண்களைக் கழுவினால், வெயிலினால் ஏற்பட்ட சூடு குறைந்து, கண் குளிர்ச்சி அடையும்.
-ஆர்.ஜெ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







