2026 கிரிக்கெட் சீசனில் அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் முதலிடம் பிடித்து, மகளிர் பிரீமியர் லீக் வரலாற்றிலேயே 'ஆரஞ்சு தொப்பி' வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை அண்மையில் படைத்தவர் இருபத்தெட்டு வயதான இடது கை வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஐந்தாம் வகுப்பு செமஸ்டர் 2 அறிவியல், சமூக ஆய்வுகள், பொது அறிவை உள்ளடக்கிய 'பி' பாடப் புத்தகத்தில், இவர் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
பாடத்தில் ஒரு சிறுவன், ஒரு பெண் கிரிக்கெட் வீராங்கனையைப் பற்றி தனது பெற்றோரிடமிருந்து கற்றுக்கொள்வதைப் போல் பாடம் அமைந்துள்ளது. சிறார்களை ஈர்க்கும் விதத்தில் பாடம் எழுதப்பட்டுள்ளது. இரு பாலின சிறார்களுக்கு மனதில் பதியுமாறும், விளையாட்டு வீரர்களைப் பார்த்து தாங்களும் கனவைப் பெரிதாகக் கண்டு வாழ்க்கையில் முன்னேறி, பிறருக்கு முன்மாதிரியாக மாற வேண்டும் என்ற குறிக்கோளுடன் பாடம் எழுதப்பட்டுள்ளது.
2025-இல் இந்தியப் பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி ஐ.சி.சி. மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றதில் மந்தனாவின் கணிசமான பங்களிப்பு உண்டு. மார்ச் 11-இல் நடைபெற்ற 'தி ஹண்ட்ரட்' வீரர் டிராஃப்ட் போட்டியின் போது மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் மகளிர் அணியால் நேரடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டபோது, உலகளாவிய கிரிக்கெட் விளையாட்டில் அவரது வளர்ந்து வரும் முக்கியத்துவம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்னர், அவர் பல்வேறு போட்டிகளில் சாதனை படைத்தார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வழிநடத்திய அவர், மொத்தம் 377 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியைப் பெற்றுள்ளார். ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரருக்கு வழங்கப்படும் மதிப்புமிக்க விருதான 'ஆரஞ்சு தொப்பி', நின்று விளையாடும் நிலையான நிதான பேட்டிங் திறமைக்குக் கிடைக்கும் பாராட்டு ஆகும்.
போட்டியாளருக்குக் கிடைக்கும் கெளரவமான இந்த விருதை இதற்குமுன், மூன்று வெளிநாட்டு வீராங்கனைகள் பெற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்ற கருவைக் கொன்றது மோடிதான்: கார்கே

மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில் தொகுதி மறுவரையறை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

மகளிர் இடஒதுக்கீடு: நாட்டிலேயே சத்தீஸ்கரில் அதிக பெண் சட்டப்பேரவை உறுப்பினர்கள்!

தினேஷ் கார்த்திக் - தீபிகா தம்பதிக்கு 3-வது குழந்தை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

