இசையின் மூலம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரையுலகில் தனக்கென்று தனி முத்திரையைப் பதித்திருப்பவர் அனிருத். கடைசியாக 'கூலி' படத்துக்கு இசையமைத்திருந்தார். இதனைத்தொடர்ந்து அவரது இசையில் 'எல்.ஐ.கே' படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
சிம்புவின் 'அரசன்', லோகேஷ் நடிக்கும் 'டிசி', 'ஜெயிலர் -2', ஷாருக்கானின் 'கிங்' போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் அனிருத் 'அல்புகர்கி ரெக்கார்ட்ஸ்' என்ற புதிய இசை லேபிள் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்.
இது தொடர்பாக பேசியிருக்கும் அனிருத், 'அல்புகர்கி ரெக்கார்ட்ஸ் மூலமாக இசையை மையப்படுத்திய வியாபாரத்துறைக்குள் நுழைகிறேன். இது என்னுடைய படைப்பாக்கத்திலும் மிக முக்கிய மைல்கல்லாக இருக்கும். திரைப்படங்களுக்கு இசையமைப்பதற்கு முன்பாக சுயாதீன பாடல்களில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறேன்.
இந்த நிறுவனம் என்னுடைய சினிமா மற்றும் தனியிசைப் பாடல்களில் புதிய திறமையாளர்களை அறிமுகப்படுத்தி ஊக்கப்படுத்த உதவியாக இருக்குமென நம்புகிறேன்.
வளமான குரல்களையும் நம்முடைய கலாசார இசையையும் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். என்னுடைய எல்லாப் பாடல்கள் மற்றும் குறிப்பிட்ட பின்னணி இசைத் தொகுப்புகளுடன் இந்த நிறுவனத்தை இப்போது ஆரம்பிக்கிறேன்' என்று கூறியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

தமிழ், சிங்கள மொழியில் வெளியான டி20 உலகக் கோப்பைக்கான பாடல்!

டி20 உலகக் கோப்பைக்கு அனிருத் இசையில் புதிய பாடல்!

ஜெய்ஹிந்த், ஜெய் ஹோ..! குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த ஏ.ஆர். ரஹ்மான்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

