'அசுரன்' திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அழுத்தமாக தடம் பதித்த கென் கருணாஸ், கதையின் நாயகனாக அறிமுகமாகும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தை கென் கருணாúஸ இயக்கி, நடித்துள்ளார்.
சுராஜ் வெஞ்சாரமூடு, தேவதர்ஷினி, அனீஷ்மா அனில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிறு இடைவெளிக்குப் பின் நளினி இப்படத்தின் மூலம் மறு பிரவேசம் செய்துள்ளார். விக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்துக்கு ஜீ .வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்களின் வாழ்வியலை மையப்படுத்திய இத்திரைப்படத்தை பார்வதா என்டர்டெய்ன்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கருப்பையா, ராம் மற்றும் சுலோச்சனா குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கியது. தொடர்ந்து ஒரே கட்டமாக இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இடைவிடாமல் அறுபது நாள்கள் வரை நடைபெற்றது.
மாணவ, மாணவியர்களின் பள்ளிக்கூட வாழ்க்கையை திரையில் நேர்த்தியாகக் காட்சிப்படுத்துவதற்காக சென்னையின் மையப் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூட வளாகத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது தினமும் குறைந்தபட்சம் நூறு துணை நடிகர்கள் கலந்துகொண்டனர். முக்கிய காட்சிகளைப் படமாக்கும் போது 300 முதல் 450 துணை நடிகர்கள் பயன்படுத்தப்பட்டனர். மேலும் படத்தின் முக்கிய பகுதியை படமாக்குவதற்காக படக்குழுவினர் கேரளாவில் உள்ள ஆலப்புழாவுக்கு ஒரு வாரம் பயணம் மேற்கொண்டனர்.
ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையில், நடன இயக்குநர் ஷோபி மாஸ்டரின் நடன அசைவில், பிரம்மாண்டமான பாடல் காட்சியுடன் உருவாகியுள்ள இப்படம் இம்மாத இறுதியில் திரைக்கு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பறந்தனே பெண்ணே பாடல்!
பறந்தேனே... யூத் இரண்டாவது பாடல்!

முட்ட கலக்கி பாடல்!
முட்ட கலக்கி - யூத் முதல் பாடல்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

