மனிதர்களின் சராசரி ஆயுள்காலம் சுமார் எண்பதாகியுள்ளது. "வாழும் ஆண்டுகளில் மகிழ்ச்சியாக வாழ என்னென்ன செய்ய வேண்டும்' என்பதை மனநல மருத்துவர் ஹிடேகி வாடா எழுதியிருக்கும் 'தி 80-இயர்-ஓல்ட் வால்' என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நூல் வெளியிடப்பட்டவுடன், ஐந்து லட்சம் பிரதிகள் விற்பனையாகியது.
அறுபது முதல் எண்பது வயதானவர்கள் "மகிழ்ச்சியான மனிதர்" என திகழ நூலில் பட்டியலிடப்பட்டுள்ள 44 விஷயங்கள்:
தொடர்ந்து நடக்கவும்.
கோபமாக இருக்கும்போது ஆழ்ந்த மூச்சை எடுங்கள்.
உடல் சோர்வடையும் வரை முடிந்தவரை உடற்பயிற்சி செய்யுங்கள்.
கோடையில் ஏ.சி. பயன்படுத்தினால், நிறைய தண்ணீர் குடிக்கவும்.
டயாப்பர்களை பயன்படுத்துவது இயற்கைக் கடன் இயக்கங்களை எளிதாக்கும்.
அடிக்கடி நடப்பது உடலையும் மூளையையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
மறதியானது வயது முதிர்ச்சியால் அல்ல; மாறாக மூளையை நீண்ட நேரம் பயன்படுத்தாததால் ஏற்படுகிறது.
அதிக மருந்துகளை எடுத்துகொள்ள வேண்டிய அவசியமில்லை.
ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை செயற்கையாகக் குறைக்க வேண்டிய அவசியமில்லை.
தனியாக இருப்பது தனிமை அல்ல; ஆனால் மகிழ்ச்சியான நேரத்தைச் செலவிடுவது செலவும் அல்ல.
சோம்பேறியாக இருப்பது வெட்கக்கேடானது அல்ல.
வயதானவர்கள் வாகனம் ஓட்டுவது ஆபத்தானது.
நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். உங்களுக்குப் பிடிக்காததைச் செய்யாதீர்கள்.
வயதாகும்போதும் அனைத்து இயற்கையான ஆசைகளும் அப்படியே இருக்கும்.
வீட்டில் இருக்காதீர்கள்.
விரும்பியதைச் சாப்பிடுங்கள், கொஞ்சம் கொழுப்பாக இருப்பது பரவாயில்லை.
எல்லாவற்றையும் கவனமாகச் செய்யுங்கள்.
உங்களுக்குப் பிடிக்காதவர்களைத் தவிர்க்கவும்.
எப்போதும் டி.வி. பார்க்காதீர்கள்.
இறுதிவரை நோயுடன் போராடுவதைவிட அதனுடன் வாழ கற்றுகொள்ளுங்கள்.
"கார் மலை ஏறினாலும் பாதை கிடைக்கும்" என்ற மந்திரத்தை நினைவில் கொள்ளுங்கள்.
புதிய பழங்கள், சாலட்டுகளைச் சாப்பிடுங்கள்.
பத்து நிமிடங்களில் குளியலை முடிக்கவும்.
உங்களால் முடியாவிட்டால் உங்களை நீங்களே தூங்கக் கட்டாயப்படுத்தாதீர்கள்.
மகிழ்ச்சியான விஷயங்களைச் செய்வது உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
உங்கள் மனதுடன் பேசுங்கள். அதிகமாக யோசிக்காதீர்கள்.
ஒரு குடும்ப மருத்துவரை முடிவு செய்யுங்கள்.
மிகவும் சகிப்புத் தன்மையுடன் இருக்காதீர்கள். கொஞ்சம் "கெட்ட கிழவன்', குறும்புக்காரனாக இருப்பது பரவாயில்லை.
சில நேரங்களில் உங்கள் மனதை மாற்றி, உங்கள் பிடிவாதத்தைக் கைவிடுவது பரவாயில்லை.
வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் "டிமென்ஷியா' (மறதி) என்பது கடவுளின் ஆசீர்வாதம்.
நீங்கள் கற்றுகொள்வதை நிறுத்தும்போது, உண்மையில் வயதாகிவிடுவீர்கள்.
புகழுக்கான ஆசையை விட்டுவிடுங்கள். உங்களிடம் இருப்பதே போதுமானது.
அப்பாவித்தனம் என்பது முதியவர்களின் பாக்கியம்.
பிரச்னைகள் அதிகமாக இருந்தால், வாழ்க்கை மிகவும் சுவாரசியமாக இருக்கும்.
வெயிலில் அமர்ந்திருப்பது மகிழ்ச்சியைத் தரும்.
மற்றவர்களுக்கு நல்லது செய்யுங்கள்.
நிம்மதியாக வாழுங்கள்.
ஆசையே நீண்ட ஆயுளுக்கு ஆதாரம்.
எப்போதும் நேர்மறையாக இருங்கள்.
சுதந்திரமாக சுவாசிக்கவும்.
வாழ்க்கையின் விதிகள் உங்கள் கைகளில் உள்ளன.
எல்லாவற்றையும் அமைதியாக ஏற்றுகொள்ளுங்கள்.
மகிழ்ச்சியான மக்கள் எப்போதும் நேசிக்கப்படுகிறார்கள்.
சிரிப்பு நல்ல அதிர்ஷ்டத்தைத் தருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இன்னும் எத்தனை காலம் வாங்கும் இடத்தில் இருப்பது? மாநில சுயாட்சி குறித்து MK Stalin! | DMK

8.2.1976: 160 வயது வாழ்ந்தவர்!
நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

ஹரியாணா: 50 வரை எண்ணத் தெரியாத 4 வயது மகளை அடித்துக்கொன்ற தந்தை கைது
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

