இரும்புச் சங்கிலியால் இணைக்கப்பட்டிருக்கும் ஹெர்குலஸ் இரும்புத் தூண்களை கீழே விழாமல் 2 நிமிடங்கள்- 10.75 விநாடிகள் பிடித்திருந்து கின்னஸ் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் இந்திய தடகள வீரர் விஸ்பி கராடி.
கிரேக்க சரித்திரத்தில் 'ஹெர்குலஸ் தூண்கள்' பிரசித்தம். கிரேக்கர்கள் கட்டடக் கலை வடிவில் அமைக்கப்பட்ட இரண்டு இரும்புத் தூண்களை சங்கிலி மூலம் கராடி பிடித்துகொண்டு தூண்கள் கீழே விழாமல் பார்ப்பதே போட்டி. சுமார் 10 அடி உயரமும் 20 அங்குல விட்டமும் கொண்ட ஹெர்குலஸ் தூண்களில் ஒன்று 166.7 கிலோ எடையும், இன்னொன்று 168.9 கிலோ எடை கொண்டவை.
இந்தத் தூண்களில் இணைக்கப்பட்டிருக்கும் சங்கிலியைப் பிடித்து அந்தத் தூண்கள் கீழே விழாமல் நிறுத்த வேண்டும். பார்க்க எளிதாகத் தோன்றும் என்றாலும் , கீழே விழ அசைந்து கொண்டிருக்கும் இரண்டு தூண்களை ஒரே சமயத்தில் தூண்களை சில நொடிகள் நிறுத்தி வைப்பது அபூர்வமானதாகும். கின்னஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ பக்கத்தில் பதிவிட்ட இந்தச் சாதனையின் காணொலியை ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர்.
பார்ஸி சமூகத்தைச் சேர்ந்த கராடிக்கு 42 வயதாகிறது. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மேண்ட் நிறுவனத்தில் வணிக மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்றவர். ஸ்டண்ட், நடன இயக்குநர், நடிகர், மாடல், உடற்பயிற்சியாளர், ஊட்டச்சத்து நிபுணர், ' க்ராவ் மகா' தற்காப்புக் கலையைப் பயிற்றுவிப்பாளர்.. என்று பன்முகத் தன்மைகளைக் கொண்டவர்.
15 கின்னஸ் உலக சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் அவர், அமெரிக்காவில் உள்ள சர்வதேச விளையாட்டு அறிவியல் அகாதெமியில் சான்றளிக்கப்பட்ட விளையாட்டு ஊட்டச்சத்து நிபுணராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
உலகின் மிகவும் பிரபலமான ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘அமெரிக்காவின் காட் டேலண்ட்' நிகழ்ச்சியில் அழைக்கப்பட்ட முதல் இந்தியர் விஸ்பி கராடி தûலைமையிலான அணியினர்தான். இவரது மனைவி ஃபர்ஸôனா 2022 திருமதி ஃபெமினா அழகி. இவர்களது இரண்டு மகன்களும் தற்காப்புக் கலைகளில் தேர்வு பெற்றுள்ளனர்.
இந்த இமாலயச் சாதனையால் ஈர்க்கப்பட்ட எலான் மஸ்க், தனது 'எக்ஸ்' பக்கத்தில் பகிர்ந்ததுடன் பாராட்டியது குறித்து காரடி கூறியிருப்பது:
'எனது சாதனை காணொலியை எலான் மஸ்க் பகிர்ந்து கொண்டார் என்பதை அறிந்தபோது சந்தோஷத்தில் மிதந்தேன். உலக அளவில் பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கின்றன என்பது பெருமையைத் தருகிறது. கடவுள் என் மீது கருணை காட்டியுள்ளார். எனக்கு இன்னும் பல இலக்குகளை அடைய வேண்டும்' என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணியின்போது கீழே விழுந்து லேத் உரிமையாளா் உயிரிழப்பு

மரத்திலிருந்து கீழே விழுந்த முதியவா் பலி

பைக்கில் இருந்து கீழே விழுந்த இளைஞா் உயிரிழப்பு

மங்கலப்பட்டி அருகே கீழே விழும் நிலையில் மின்கம்பம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

