/

வியக்க வைக்கும் வானவில் மலைகள்..!

உலகம் முழுவதும் அழகு பரவிக் கிடக்கிறது. ஆமாம் மலைகளில்கூட வானவில் வண்ணங்களை அள்ளி வழங்கும் மலைகள் உள்ளன.

News image
மலைகள்
Updated On :19 அக்டோபர் 2024, 6:30 pm

ராஜிராதா

உலகம் முழுவதும் அழகு பரவிக் கிடக்கிறது. ஆமாம் மலைகளில்கூட வானவில் வண்ணங்களை அள்ளி வழங்கும் மலைகள் உள்ளன. அந்த வகையில் ஏழு வானவில் மலைகளைப் பற்றி அறிவோம்.

ஜான்கியோ டான்சியா:

சீனாவின் வட மேற்கில் உள்ள கன்சு மாகாணத்தில் உள்ள ஜாங்கியே டான்சியா தேசிய பூங்காவில் உள்ள இந்த மலைத் தொடரில் 322 கி.மீ. தொலைவு பரவியுள்ளது. சீனாவின் மிக அழகான நிலப் பரப்புகளில் ஒன்று. மிக அதிக மக்களால் பார்க்கப்பட்ட பகுதி. 24 மில்லியன் ஆண்டுகள் பழைய மலை என்கின்றனர்.

காற்று, மழை, நேரம்.. என்று வண்ணங்களைப் பூசியுள்ளது. அசப்பில் பல வண்ணங்களைக் கொண்ட அடுக்கு கேக்குகளைப் போல் உள்ளன. மணற்கல், பிற கனிமங்களின் விளைவு என்கின்றனர். இது ஒரு யுனெஸ்கோ பராம்பரியத் தளம்.

செர்ராணியா டி ஹார்நோகல்:

ஆர்ஜென்டினாவின் ஹூமாஹூவாலிருந்து 25 கி.மீ. தொலைவில் இந்த மலைத் தொடர் 4,761 மீ. உயரத்தில் உள்ளது. யுனெஸ்கோ பாரம்பரியத் தளமான இங்கு சிவப்பு வண்ண மலையைக் காணலாம். வழிநெடுக வண்ணமயமான மணல் நிரப்புகளைக் காணலாம். இவற்றின் சிறப்பு என்னவென்றால் வர்ணம் பூசியது போல் இருப்பதுதான்.

வர்ணம் பூசிய மலைகள்:

அமெரிக்காவின் ஒரேகானின் வீலர் கவுண்டியில் இந்த வர்ணம் பூசிய மலைகள் உள்ளன. 3,132 ஏக்கர்(12.67 கி.மீ.) வர்ணம் பூசப்பட்டது போல் தோன்றும் இவை ஒரேகானின் ஏழு அதிசயங்களில் ஒன்று.

மண், கல், சிலிட்..ஸ்டோன் லிக்லைட் ஆகியவற்றின் கலவை. வெவ்வேறு அடுக்குகளைக் கொண்டது. 35 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்கின்றனர். இங்கு அலுமினியம், கால்சியம், பாஸ்பரஸ், சிலிகான், டைடானியம், பொட்டாசியம் உள்ளிட்ட தனிமங்கள் உள்ளதால், வண்ணங்கள் உருவாகின்றன. குறிப்பாக, சிவப்பு, சாம்பல், மஞ்சள், கருப்பு என பல வண்ணங்கள் ஏற்படுகின்றன. ஈரமாக இருக்கும்போதும், சூடாகும்போதும் வண்ண மாற்றங்கள் தெரிகின்றன.

ஐஸ்லாந்தின் லேண்ட் மண்ணுலகர்:

ஐஸ்லாந்தின் மிக சுவாரசியமான பகுதி. ஃபிஜல்லபாக் நேச்சர் ரிசர்வ் பகுதியில் ஐஸ்லாண்டிக் மலைப் பகுதியில் அமைந்துள்ளது. லேண்ட் மண்ணுலகர். இங்கு மலை பல வண்ணங்களில் காட்சி அளிக்கிறது. சிவப்பு, நீலம், மஞ்சள் நிறங்கள் அனைத்து மலைப் பகுதிகளிலும் காணப்படுகின்றன.

ஐஸ்லாந்து எரிமலை, வெப்ப செயல்பாடுகளுக்கு ஒரு முக்கிய பூமி. உண்மையில் தீவில்130 எரிமலைகள் உள்ளன. எரிமலை அருகில் மாக்மா நிச்சயம் இருக்கும். ரியோலைட் என்ற கணிமம் உள்ளதால் பல வண்ணத் தோற்றத்தை காண்கிறோம். இது ஒரு மலை ஏறு பகுதி. ஆக, இதனை கண்டு களிக்கவே மக்கள் மலை ஏறுகின்றனர். அருகில் சூடான நீர் ஊற்றுகளும் உண்டு.

அலை அமெரிக்கா:

வெர்மிலியன் தேசிய சின்னம். வனப் பகுதிக்குள் உட்டா. அரிசோனா மாநிலக்கோட்டில் இந்த அலை மலைப்பகுதி அமைந்துள்ளது. வெர்மிலியன் கிளிஃப்களுக்குள் கொயோட் பட்ஸ் பகுதி உள்ளது. இதன் வடக்குப் பகுதியில் இந்த அலை உள்ளது.

பெருவின் வானவில் மலை:

இயற்கையாகவே மணற்கல், எரிமலை சாம்பல்களால் ஆனது. இந்த அடுக்குகளில் மெக்னிசியம் ஆக்ஸைடு தாக்கம் அதிகம். சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம், ஊதா என பல வண்ணங்கள் அழகை அள்ளித் தருகின்றன. வெயிலின் தாக்கத்துக்கேற்ப வண்ணங்கள் மாறுகின்றன.

பெருவின் பூர்மா மார்கா கிராமத்தில் இந்த வண்ண மலைத் தொடர் உள்ளது. ஒரு வானவில் வானத்திலிருந்து இறங்கி பூமியில் நிரந்தரமாக இருக்க, இங்கு வந்து தங்கியபோது கல்லாக மாறிவிட்டது என கூறுகிறது. இந்த மலையின் வான் காட்சியும், பக்கவாட்டு காட்சியும் அற்புதமாக இருக்கும்.

ஆர்ஜென்டினா 7 வண்ண மலை:

ஆர்ஜென்டினாவின் ஜுஜுய் மாகாணத்தில் க்யூப்ராடி புர்ம மங்காவின் எல்லையில் உள்ளது. இந்த மலைத் தொடர் தனித்துவமான வண்ண ஜொலிப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.