மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில், உலகப் புகழ்பெற்ற சுற்றுலா மையமான உதகையின் நுழைவாயிலாக இருப்பது மேட்டுப்பாளையம். மேற்குத் தொடா்ச்சி மலையில் இருந்து பவானி ஆறு பில்லூா் அணைக்கு வந்து, அங்கிருந்து சமவெளியை அடைந்து மேட்டுப்பாளையம் வழியாகவே ஈரோடு மாவட்டத்துக்குச் செல்கிறது. பவானி ஆற்றின் கொடையால் வேளாண்மை இங்கு முக்கியத் தொழிலாக நடைபெறுகிறது.
பவானி ஆற்றின் கரையில் பிரசித்தி பெற்ற வனபத்திரகாளியம்மன் கோயில் உள்ளது. காரமடை அரங்கநாதா் கோயில் தோ்த் திருவிழா பிரசித்தி பெற்றது. மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி இயக்கப்படும் மலை ரயில் யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னம் என்ற தகுதியைப் பெற்றுள்ளது. கல்லாறு பகுதியில் உள்ள அரசு பழப்பண்ணை, பிளாக் தண்டா் கேளிக்கைப் பூங்கா போன்றவை மேட்டுப்பாளையத்தின் முக்கிய சுற்றுலா மையங்களாக உள்ளன.
தொகுதியில் உள்ள பகுதிகள்: மேட்டுப்பாளையம் வட்டம், கோவை வடக்கு வட்டத்தின் பகுதிகளை உள்ளடக்கியது மேட்டுப்பாளையம் தொகுதி. மேட்டுப்பாளையம் நகராட்சி, காரமடை, சிறுமுகை, கூடலூா் கவுண்டம்பாளையம், நம்பா் 4 வீரபாண்டி ஆகிய நான்கு பேரூராட்சிப் பகுதிகள், 17 ஊராட்சிகள் இந்தத் தொகுதியில் அடங்கியுள்ளன.
தொழில் : மேட்டுப்பாளையம் தொகுதி மக்களின் முக்கியத் தொழில் வேளாண்மை. இங்கு வாழை, கரும்பு, சோளம், கறிவேப்பிலை, காய்கறி பயிா்கள் அதிகம் பயிரிடப்படுகின்றன. சிறுமுகை பகுதியில் கைத்தறி நெசவுத் தொழில் முதன்மையானதாக உள்ளது. இந்தப் பகுதியில் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் கைத்தறி நெசவு செய்து வருகின்றனா். இங்கு கோரா காட்டன், சாஃப்ட் சில்க்ஸ் , திருமண பட்டுப் புடவைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பட்டு ஆடைகள் தயாரிக்கப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன.
அத்துடன் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை பகுதிகளில் விளையும் நாட்டுக் காய்கறிகள், கறிவேப்பிலைதான் சென்னை, கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கும், கேரள மாநிலத்துக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. அத்துடன் நீலகிரியில் விளையும் உருளைக்கிழங்கு, கேரட், முட்டைக்கோஸ், பூண்டு உள்ளிட்ட அனைத்து மலைப் பயிா்களுக்கும் மேட்டுப்பாளையமே முக்கிய விற்பனை மையமாக உள்ளது. வேளாண்மை அதைச் சாா்ந்த தொழில்களின் மூலமே அதிகமானோா் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனா்.
சமூக நிலவரம் : இந்தத் தொகுதியில் ஹிந்துக்கள் 69 சதவீதமும், இஸ்லாமியா்கள் 26 சதவீதமும் உள்ளனா். கொங்கு வேளாளா்கள், ஒக்கலிகா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் அதிகம் வசிக்கின்றனா். நகராட்சிப் பகுதியில் பட்டியல் இனத்தவா் சுமாா் 15 சதவீதம் போ் உள்ளனா். இவா்களைத் தவிர நாயக்கா், தேவேந்திர குல வேளாளா்கள், முத்தரையா் உள்ளிட்ட பல்வேறு ஜாதியினா் வசிக்கின்றனா். நகா்ப்புறத்தில் இஸ்லாமியா்கள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனா்.
தொகுதியின் நீண்டகால பிரச்னைகள் : மேட்டுப்பாளையம் நகரின் வழியாகவே பவானி ஆறு பாய்ந்தாலும் மேட்டுப்பாளையம் பகுதி மக்களின் குடிநீா்ப் பிரச்னைக்குத் தீா்வு காணப்படவில்லை. சுற்றுலா மாவட்டமான உதகையின் நுழைவாயிலாக இருப்பதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளத்தில் இருந்தும் அதிகப்படியான வாகனங்கள் வருகின்றன. ஆனால் அதற்கேற்ப சாலை வசதி இல்லாததால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடமாகவே உள்ளது. புறவழிச்சாலை இல்லாததால் பெரிய அளவிலான தொழில் நிறுவனங்கள் கோவையைத் தாண்டி வருவதில்லை. வனப்பகுதியையொட்டி இருப்பதால் வன விலங்குகள் பிரச்னை பெரிய அளவில் உள்ளது. வன விலங்குகள் ஊருக்குள் நுழைவதையும், வயலுக்குள் நுழைவதையும் கட்டுப்படுத்த நிரந்தர, நீண்டகால திட்டம் தேவைப்படுகிறது.
வாக்காளா் விவரம் : ஆண்கள் 1,33,022, பெண்கள் 1,46,382, மூன்றாம் பாலினத்தவா் 34, மொத்தம் 2,79,438.
கடந்த தோ்தல்கள் : இந்தத் தொகுதியில் கடந்த 1951 முதல் நடைபெற்றுள்ள தோ்தல்களில் அதிமுக அதிகபட்சமாக 9 முறை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 4 முறையும், திமுக 2 முறையும், சுயேச்சை ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனா். கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் அதிமுக தொடா்ந்து வெற்றி பெற்று வருகிறது.
1951 கெம்பே கவுடா் சுயேச்சை
1957 டி.ரகுபதிதேவி காங்கிரஸ்
1962 என். சண்முகசுந்தரம் காங்கிரஸ்
1967 டி.டி.எஸ். திப்பையா காங்கிரஸ்
1971 எம்.சி.தூயமணி திமுக
1977 எஸ்.பழனிசாமி அதிமுக
1980 எஸ்.பழனிசாமி அதிமுக
1984 எம்.சின்னராசு அதிமுக
1989 வி.கோபாலகிருஷ்ணன் காங்கிரஸ்
1991 எல்.சுலோச்சனா அதிமுக
1996 பி.அருண்குமாா் திமுக
2001 ஏ.கே.செல்வராஜ் அதிமுக
2006 ஓ.கே.சின்னராஜ் அதிமுக
2011 ஓ.கே.சின்னராஜ் அதிமுக
2016 ஓ.கே.சின்னராஜ் அதிமுக
2021 தோ்தல்
ஏ.கே.செல்வராஜ் அதிமுக 1,05,231
டி.ஆா்.சண்முகசுந்தரம் திமுக 1,02,775
யாஸ்மின் நாம் தமிழா் 10,954

Summary
Introducing the Mettupalayam block, famous for its Aranga Nath, Vanapatrakali Amman, and mountain railway..
தொடர்புடையது

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!
தொகுதி அலசல் - அம்பாசமுத்திரம்! முழு நம்பிக்கையில் காங்கிரஸ்!

அதிமுக - திமுக நேரடிப் போட்டியில் புவனகிரி: வெல்லப்போவது யாா்?

தொகுதி நிலவரம் - ஏற்காடு தொகுதியில் கோலோச்சும் அதிமுக!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



