சுவிட்சர்லாந்தில் வேலைக்குச் செல்பவர்களும், வேலையிலிருந்து ஓய்வுப் பெற்றவர்களும் தங்களது ஓய்வு நேரத்தில் படுத்த படுக்கையில் கிடைக்கும் வயதானவர்களைக் கவனித்துக் கொள்கின்றனர். வயோதிகர்கள் வாழும் வீட்டை சுத்தம் செய்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான பொருள்களைக் கடைகளிலிருந்து வாங்கி வருகின்றனர். அவர்கள் விரும்பும் உணவை சமைத்துக் கொடுக்கின்றனர். அவர்களின் தனிமையைப் போக்க அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த வகையான கவனிப்புக்குச் சம்பளம் எதுவும் கிடையாது. ஆனால் அவர்கள் வயோதிகர்களை எத்தனை மணி நேரம் பராமரிக்கிறார்களோ அத்தனை மணி நேரம் "கால வங்கி'யில் பராமரிப்பவர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
எதிர்காலத்தில் இப்படி வயதானவர்களை பாராமரிப்பவர்களுக்கும் உடல் நலம் குறையலாம். நோய்வாய்ப்படலாம். படுக்கையில் கிடைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். பிறர் உதவி தேவைப்படலாம். அந்த இக்கட்டான சமயங்களில், "காலவங்கி'யில் சேமித்துவைத்த பராமரிப்பு நேரத்தைப் பயன்படுத்தி உதவியாளர்களைத் தருவித்துக் கொள்ளலாம். இந்தப் பராமரிப்பு பணியைச் செய்பவருக்கு சம்பளம் ஏதும் தரவேண்டாம். அவர் நமக்கு உதவும் நேரத்தை அவர் கணக்கில் அவருக்காகச் சேமிப்பார். அதாவது நாம் பிறருக்கு செய்த உதவியைப் போல் இன்னொருவர் நமக்கு உதவுவார். அவருக்கு வேறு ஒருவர் தக்க சமயத்தில் உதவுவார். இப்படி சங்கலித் தொடராக முதியோர்களுக்குப் பராமரிப்புப் பணிகள் தொடரும்.
இந்தச் சேவைகளை "கால வங்கி' நிர்வகிக்கிறது. பிறருக்கு உதவும் மனப்பான்மை உள்ளவர்கள் கால வங்கியில் பெயரைப் பதிவு செய்யலாம். கணக்கு தொடங்கிக் கொள்ளலாம். அங்கு வயதானவர்களுக்கு உதவும் நேரம் வங்கிக் கணக்கில் சேமிக்கப்படும். நமக்கு பிறர் உதவி தேவைப்படும் சமயத்தில் வங்கியை அணுகினால் அவர்கள் தன்னார்வலரை உதவிக்காக அனுப்பி வைப்பார்கள். தன்னார்வலர்கள் நமக்கு சேவை செய்யும் நேரம் நமது நேரச் சேமிப்புக் கணக்கிலிலிருந்து குறைக்கப்படும்.
"டைம் பேங்க்" எனப்படும் "கால வங்கி' சுவிஸ் மத்திய சமூகப் பாதுகாப்பு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட முதியோர் ஓய்வூதியத் திட்டமாகும். சுவிட்சர்லாந்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் திட்டமாகும்.
இந்திய சூழலில், காலவங்கி சாத்தியப்படுமா? என்ற சந்தேகம் இருந்தாலும், முதியோர்களைக் கவனித்துக் கொள்ள, அவர்களின் தனிமையைப் போக்க பேசிக் கொண்டிருக்கும் சேவைகள் மும்பையில் கட்டண அடிப்படையில் தொடங்கியுள்ளன.
இதேலட்சியத்துடன் ராஜஸ்தான் ஜெய்ப்பூர் நகரில் "டைம் பேங்க் ஆஃப் இந்தியா' என்ற பெயரில் சமூக அமைப்பு ஒன்று சுவிஸ் கால வங்கி செயல்பாட்டுடன் இயங்கிவருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆராயாமல் எழும் நெஞ்சம்
மறுவரையறை மசோதா - ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் சதி: பிரியங்கா காந்தி

ஏரி நீா்வரத்துக் கால்வாயை ஆக்கிமித்து தாா் சாலை: பொதுமக்கள் அதிருப்தி
ரூ.228 கோடி வங்கி மோசடி வழக்கு: அனில் அம்பானி மகனிடம் ஆறரை மணி நேரம் சிபிஐ விசாரணை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

