கண்களைக் கவரும் மலர்களின் மதிப்பு ஓரிரு நாள்கள்தான். நறுமணம் இருந்தாலும் வாடி வதங்கிய மலர்களை குப்பையாகத் தூக்கி எறிந்துவிடுவார்கள். வாடிப் போகும் மலர்களைப் பயன்படுத்தி விற்பனைச் சந்தையை உருவாக்கியிருக்கிறார் சிவராஜ் நிஷாத்.
வாடிய மலர்களைச் சூரிய ஒளி உலர்த்திகளில் விரைவாக உலர்த்தி மதிப்பும் கூட்டி விற்பனை செய்து வரும் சிவராஜ் நிஷாத், மலர் விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தின் ஷேக்பூர் கிராமத்தைச் சேர்ந்த அவரிடம் பேசியபோது:
'மருந்து விற்பனைப் பிரதிநிதியாக வேலை செய்துவந்த எனக்கு சில ஆண்டுகளில் சலிப்பு ஏற்பட்டது. முப்பது வயதில் என்ன மாற்று தொழில் செய்யலாம் என்று தீவிரமாக யோசித்தேன்.
எனது குடும்ப நிலத்தில் மலர் செடிகளை வளர்க்கத் தொடங்கினேன். மலர்ந்த மலர்களை விற்பனை செய்ததுபோக மிச்சமாகும் பூக்கள் வாடிப் போய் வீணாவது வருமானத்தைக் குறைக்கிறது என்பதை உணர்ந்தேன். வாடிய பூக்களின் மூலம் புதிய லாபம் தரும் வழியைக் கண்டுபிடித்தேன்.
சூரிய ஒளியில் இயங்கும் உலர்த்திகளைப் பயன்படுத்தி, மல்லிகை, ரோஜா இதழ்களை உலர்த்தி தேயிலையுடன் அளவாகச் சேர்த்து மலர் தேயிலைப் பொடியைத் தயாரித்தேன். இதனுடன் இஞ்சி, பட்டைகளைத் துகள்களாக்கி அளவாகச் சேர்க்கிறேன். அதனால் வித்தியாசமான மணமும் சுவையும் அதிகரிக்கிறது. இதர விவசாயிகள், தங்களால் விற்க முடியாத மலர்களை விற்க முடியாமல், கங்கையில் கொட்டி மாசுப்படுத்தி வந்தனர். சில சமயங்களில் .
"ஒரு கிலோ பூ கூட வாங்க யாரும் இல்லை" என்று விவசாயிகள் கவலைப்படுவதை பலமுறை வேதனையுடன் பார்த்திருக்கிறேன். அந்த நிலைமை தற்போது மாறியுள்ளது.
பறிக்கப்பட்ட சில நாள்களில் அழுகத் தொடங்கும் மலர்களை உலர்த்துவதால், அவற்றின் நிறம், வாசனை, மருத்துவக் குணங்களைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
இன்னொரு தயாரிப்பான "ப்ளூ டீ' போன்ற மூலிகை தேநீர் தயாரிக்கப் பயன்படும் நீல பட்டாணி பூ, உடல் திசுக்களைக் காக்கும். இளமையாக வைத்திருக்கும். நீரிழிவு எதிர்ப்புத் தன்மைகளைக் கொண்டுள்ளது. இதை எனது குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பாகும்.
திறந்த சூழலில் பூக்களை உலர்த்துவதில் காற்றில் கலந்துவரும் தூசி உலரும் மலர்களில் அமரும். காற்று வேகமாக வீசினால் மலர்கள் சிதறுவதோடு, பறக்கும். மழை பெய்தால் மலர் படுகைகளை மூட வேண்டும். பூக்கள் உலர்வதும் தாமதமாகும். எனவே சூரிய உலர்த்திகளைப் பயன்படுத்தினால் இந்த பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.
சூரிய ஒளி உலர்த்திகள் மூடியிருப்பதால் வெளியே உள்ள தூசிகள் உள்ளே செல்லாது. 40 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலையை நிலையில் பூக்களை உலர்த்தினால் பூக்களின் அசல் நிறத்தையும், வாசனையையும் இழக்காமல் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
தற்போது பூ வியாபாரம் மாதம்தோறும் ஆயிரம் கிலோ பூக்களை விற்பனை செய்து, நான்கு லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறேன். உலர் பூக்கள் விற்பனை மூலம் பல பூச் செடிகளை வளர்க்கும் விவசாயிகள் பலன் பெறுகின்றனர்.
எங்கள் பகுதியில் பூக்கள் வீணாகும் என்ற கவலை இல்லாமல் விவசாயிகள் பூக்களை அறுவடை செய்து விற்கிறார்கள். அவற்றை நியாயமான விலைக்கு நான் வாங்கிக் கொள்கிறேன். இது இந்தப் பகுதியில் விவசாயிகள் இடையே பண சுழற்சியை விரைவுபடுத்தியுள்ளது'' என்கிறார் சிவராஜ் நிஷாத்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேசிய சா்ஃப்பிங்: சிவராஜ், கமலி மூா்த்திக்கு பட்டம்!
பொன்னாங்கண்ணிக் கீரை சாப்பிட்டால்...

வேண்டுதல் நிறைவேறியது! தனிமையில் வாடிய பஞ்ச் குரங்குக் குட்டிக்கு கேர்ள் ஃபிரண்ட்!

உரத் தட்டுபாடு குறித்து ஆலோசனை: மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான்
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

