தெருவோரம் வசிப்போரின் பிள்ளைகள் சிலரை படிக்க வைத்து, அவர்களை உலக கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்க வைத்துள்ளார் சென்னையின் தன்னார்வ தொண்டு நிறுவனமான "கருணாலயா' பொறுப்பாளர் பால் சுந்தர் சிங்.
நாட்டில் மெட்ரோ நகரங்களில் தெருவோரம் வசிப்போரின் வாரிசுகள் அடங்கிய கிரிக்கெட் குழு இருந்தாலும், "கருணாலயா' உருவாக்கிய "இந்தியா டைகர்ஸ்' அணி' 2019-இல் லண்டனின் புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், சாம்பியன் பட்டத்தை வென்றது.
உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் நடப்பதற்கு முன்னதாக, தெருவோரப் பிள்ளைகளுக்கான உலக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும். இதன்படி, அவர்களுக்கான போட்டி சென்னை அமீர் மஹால் மைதானத்தில் செப். 22இல் தொடங்கி அக். 1 வரை நடைபெற்றது.
வங்கதேசம், புருண்டி, இங்கிலாந்து, ஹங்கேரி, மொரிஷியஸ், நேபாளம், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ருவாண்டா, உகாண்டா, தான்ஸானியா, பிரேசில், ஜிம்பாப்வே அணிகள் கலந்து கொண்டன. சென்னை அணி உள்பட ஏழு இந்திய அணிகளும் போட்டியில் கலந்து கொண்டன.
ஒவ்வொரு குழுவிலும் நான்கு ஆண்கள், நான்கு பெண்கள் இடம் பெற்றிருந்தனர். தலா நான்கு பந்து வீச்சுகள் கொண்ட 5 ஓவர்கள். கருணாலயா அணியான "இந்தியா டைகர்ஸ்' அணிக்கு தமிழ்நாடு அரசு, பெருநகர சென்னை மாநகராட்சி, அஸீம் பிரேம்ஜி அறக்கட்டளை, ஆமோஸ் அறக்கட்டளை, சென்னை துறைமுகம் ஆகியன உதவின. சென்னை துறைமுகத்தின் கிரிக்கெட் பயிற்சியாளர் லோகநாதன் அணிக்கு பயிற்சி அளித்தார். இருப்பினும், அரை இறுதி சுற்று வரை மட்டுமே "இந்தியா டைகர்ஸ் அணி' போட்டியில் முன்னேற முடிந்தது. உகாண்டா அணி உலகக் கோப்பையை வென்றது.
இதுகுறித்து பால் சுந்தர் சிங் கூறியதாவது:
'கருணாலயாவில் கிரிக்கெட் அணியுடன் இதர தெருவோர பிள்ளைகளும் தங்கியுள்ளனர். அவர்களுக்கு உணவு, உறைவிடம், உடை, கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு வசதிகளை கருணாலயா செய்து தருகிறது. கருணாலயா அணியின் கேப்டன் மோனிஷா எத்திராஜ் கல்லூரியில் படிக்கிறார். இதர ஆட்டக்காரர்கள் பள்ளிகளில் படிக்கின்றனர்.
கருணாலயாவில் கிரிக்கெட் அணி போலவே கால்பந்தாட்ட அணியும் உண்டு. தெருவோர பிள்ளைகளுக்கான கால்பந்தாட்ட உலகப் போட்டியில், 2016இல் எங்கள் அணி பிரேசில் ரியோவுக்கு சென்றுவந்தது. ரியோ ஒலிம்பிக்ஸூக்கு முன் நடந்த போட்டிகளில் எங்கள் அணி கலந்து கொண்டு தலா ஒரு தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்களையும் பெற்றுள்ளது. 2018இல் கால்பந்தாட்டப் போட்டிகளில் கலந்து கொள்ள எங்கள் அணி மாஸ்கோ சென்று வந்தது'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் கஞ்சாவை ஒழிப்போம்: இபிஎஸ்
ஜெர்மனி குருத்வாராவில் சீக்கியர்கள் மோதல்; 11 பேர் காயம்!

பாஜக ஆட்சி அமைத்த 6 மாதங்களுக்குள் கோர்க்கா பிரச்னைக்குத் தீர்வு: அமித் ஷா

பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


