தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆர்யாவின் 'தி வில்லேஜ்'

அமேசான் பிரைம் விடியோவில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள திகில் தொடர் "தி வில்லேஜ்'.

News image
Updated On :25 நவம்பர் 2023, 6:30 pm


அமேசான் பிரைம் விடியோவில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள திகில் தொடர் "தி வில்லேஜ்'.

இந்தத் தொடர்  அஸ்வின் ஸ்ரீவத்சங்கம்,  விவேக் ரங்காச்சாரி மற்றும் ஷாமிக் தாஸ் குப்தா ஆகியோர் உருவாக்கிய கிராஃபிக் ஹாரர் நாவல்களால் ஈர்க்கப்பட்டு உருவாகியிருக்கிறது.  தனது குடும்ப உறுப்பினர்களின் மறைவுக்கு பின்னணியில் உள்ள மர்மத்தை அவிழ்க்க முயற்சிக்கும் மனிதனின் கதையை இந்தத் திகில் தொடர் விவரிக்கிறது. நடிகர்ஆர்யா இந்தத் திகில் தொடரில் நடித்ததன் மூலம் நீண்ட வடிவத்திலான இணையத் தொடரின் ஸ்ட்ரீமிங்கில் அறிமுகமாகிறார். திவ்யா பிள்ளை, ஆழியா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மரியான், பி. என். சன்னி, கே. முத்துக்குமார், எஸ். எஸ். கலைராணி, ஜான் கொக்கன், பூஜா, வி. ஜெயப்பிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம், "தலைவாசல்' விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தத் தொடர் வினோதமான தோற்றமுடைய உயிரினங்கள்... மரபு பிறழ்ந்தவர்கள்.. ஒரு குடும்பத்தை இடைவிடாமல் வேட்டையாடும் பயங்கர கொடூரத்தின் முடிவில்லாத இரவைக் காட்சிப்படுத்தி இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் சகிப்புத்தன்மையின் விளிம்பிற்கு அழைத்துச் செல்கிறது. 

இந்த ஒரிஜினல் தமிழ் திகில் தொடரை இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கி இருக்கிறார். ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பி. எஸ். ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ளார். நடிகர் ஆர்யா பேசுகையில், "" தி வில்லேஜ் எனும் திகில் தொடருடனான எனது ஒ. டி. டி. எனும் டிஜிட்டல் தள அறிமுகம் நிச்சயமாக ஒரு வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது. இந்த இணைய தொடர் சுவராசியமானதாக இருப்பதையும் நான் கண்டேன். இது என்னை தொடர்ந்து பணியாற்ற வழி வகுத்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.