முதல் பாகத்தைப் போலவே 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகமும் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது.
வெளிவந்த முதல் இரு நாள்களிலேயே சுமார் ரூ.100 கோடி வசூல் என லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்காக தம்பதி சகிதமாக ஜப்பானிலிருந்து சென்னைக்கு வந்திருக்கிறார் நடிகர் கார்த்தியின் ரசிகை.
பொதுவாக, ரஜினிக்குதான் ஜப்பானில் அதிக ரசிகர்கள் என்று சொல்லப்படுவதுண்டு. அதைத் தாண்டி தற்போது கார்த்திக்கு ஜப்பானில் ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது.
ஜப்பானிலிருந்து வருகை புரிந்த தெருமி ககுபரி ஃபுயுஜிடாவை நடிகர் கார்த்தி தனது வீட்டுக்கு வரவைத்து அவருக்கு உணவு பரிமாறி உரையாடி மகிழ்ந்துள்ளார்.
இந்தச் சந்திப்பு குறித்து ரசிகை தெருமி ககுபரி ஃபுயுஜிடா கூறுகையில்,
"நான் வேலை நிமித்தமாக சில காலம் இந்தியாவில் தங்கியிருந்தேன். அப்போது தமிழ் படங்களைப் பார்ப்பேன். அது முதல் நான் கார்த்தியின் தீவிர ரசிகை. 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் புரிந்து கொள்ள கடினமாக இருந்தது. அதில் கார்த்தி நடிப்பு மிகவும் பிடித்திருந்தது. 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் ஜப்பானில் வெளியாக காலமாகும் என்பதால் உடனே பார்த்தாக வேண்டும் என்று அங்கிருந்து கிளம்பி வந்தோம். மிக அட்டகாசமான படம்'' என்றார்.
நடிகர் கார்த்தி கூறுகையில் "மிக சந்தோஷமான அனுபவம். அவருடன் பல விஷயங்கள் உரையாடினேன். அவரின் சினிமா பார்வை ஆச்சரியம் தந்தது. அடுத்து நான் நடித்து வருகிற படத்தின் பெயர் ஜப்பான் என்றதும் இன்னும் சந்தோஷப்பட்டார்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஊழியர்களுக்கான சலுகைகளைக் குறைக்கும் டெலோய்ட்! ஐவிஎஃப் சிகிச்சைக்கான நிதியையும்

கே.எல். ராகுல் 152*: தில்லி கேபிடல்ஸ் 264 ரன்கள் குவிப்பு!

மேட்டுப்பாளையம் அருகே தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானை!

ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

