சமூகப் பணியில் மாற்றுத்திறனாளி!
ஆலங்குடி அருகேயுள்ள ராசியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இயன்முறை மருத்துவர் க.கோவிந்தசாமி.


ஆலங்குடி அருகேயுள்ள ராசியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இயன்முறை மருத்துவர் க.கோவிந்தசாமி. மாற்றுத்திறனாளியான இவர் பேச்சாளர், கவிஞர், எழுத்தாளர், பாடகர், சமூக ஆர்வலர் உள்பட பன்முகத்தன்மைகளைக் கொண்டவர்.
இவருடன் ஓர் சந்திப்பு:
மாற்றுத்திறனாளிகளின் இன்றைய நிலைமை?
உலக சுகாதார அமைப்பின் கணிப்பின்படி, உலகில் சுமார் 100 கோடி பேர் மாற்றுத்திறனாளிகள். அதில் 20 கோடிக்கும் மேற்பட்டோர் மிகுந்த சிரமத்துடன் வாழ்கின்றனர்.
அப்படிப்பட்டோர் வாழ்க்கையில் பல இடர்பாடுகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. ஆனால், சிலர் நாம் பிறந்த மனித சமூகத்துக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்றும் அர்த்தமுள்ள வாழ்க்கையாக மாற்ற வேண்டும் என்றும் எண்ணி பயணிக்கின்றனர்.
போலியோவால் பாதிக்கப்பட்டு 6 வயதுக்குப் பிறகு தான் என்னால் நடக்க முடிந்தது. இயன்முறை மருத்துவப் படிப்பு முடித்து, மாற்றுத்திறனாளிகளுக்காக சேவையாற்றி வருகிறேன். மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 12 குழந்தைகளைப் பயிற்சியின் மூலம் நடக்க வைத்து, பள்ளிப்படிப்பைத் தொடர வைத்துள்ளேன். இதுவரை 70 பக்கவாத நோயாளிகளை நடக்க வைத்து மறுவாழ்வு அளித்துள்ளேன். இலவச மருத்துவ முகாம்கள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இலவச மருத்துவச் சேவை, மூலிகை தைலம் வழங்குதல், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் சலுகை பெற்று கொடுத்தல் போன்ற சேவைகளைத் தொடர்ந்து செய்து வருகிறேன்.
மூளை முடக்குவாதம். தசை சிதைவு போன்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத குழந்தைகளை பயிற்சியின் மூலம் நடக்க வைக்கும்போது, மிகுந்த மன நிறைவு ஏற்படுகிறது.
இதற்காக உங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் என்ன?
பல்வேறு அமைப்புகளிலிருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட விருதுகள் கிடைத்திருக்கின்றன. அவற்றில் புதுச்சேரி உலக கவிஞர்கள் சங்கம் சார்பில் திருவள்ளுவர் விருது , சிறந்த கட்டுரையாளருக்கான அரசு விருது, சிறந்த இயன் முறை மருத்துவர், வரலாற்று நாயகன் விருது, மனித நேய அறக்கட்டளை வழங்கிய மனித நேய மாண்பாளர், சென்னை பைன் ஆர்ட்ஸ் வழங்கிய டாக்டர் அம்பேத்கர் விருது போன்றவை மறக்க முடியாதவைகளாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...