ஜீ ஸ்டுடியோ மற்றும் வே ப்ரேர் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "கிங் ஆஃப் கோதா'. ரசிகர்களை ஈர்க்கும் வகையில், ஒரு கமர்ஷியல் படத்திற்குரிய அனைத்து அம்சங்களையும் இப்படம் கொண்டுள்ளது. படத்தின் ஒவ்வொரு தகவலுக்காகவும், ரசிகர்கள் ஏங்கி வரும் வேளையில், இப்படத்தின் கதாப்பாத்திரங்கள் குறித்த அதிரடியான அறிமுக விடியோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விடியோ, படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களை சுவாரஸ்யமான ஸ்கெட்ச் வடிவில் அறிமுகப்படுத்துகிறது.
அதிலும் துல்கர் சல்மானை "ராஜாவாக' சித்தரித்திருப்பது, ரசிகர்களிடம் மிகப்பெரும் தாக்கத்தை உருவாக்கும் வகையில், அசத்தலாக அமைந்துள்ளது. இப்படத்தில் துல்கர் சல்மான், டான்சிங் ரோஸ் சபிர், பிரசன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, நைலா உஷா, செம்பன் வினோத், கோகுல் சுரேஷ், ஷம்மி திலகன், சாந்தி கிருஷ்ணா, வட சென்னை சரண், அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.
துல்கர் சல்மானுக்கு உள்ள மிகப்பெரும் வரவேற்பையும், ஓணம் பண்டிகையின் விடுமுறை காலத்தையும், பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இப்படத்தை வரும் ஓணம் பண்டிகைக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார், ஷான் ரஹ்மான் மற்றும் ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். எதிர்பார்ப்புமிக்க இப்படத்தின் அதிரடியான டீஸர், கடந்த ஜூன் 28 ஆம் தேதி வெளியானது. டீஸருக்கு தென்னிந்தியா முழுவதும் பெரும் வரவேற்பு எழுந்துள்ளது. தனித்துவமான கதையுடன், மிரட்டலான உருவாக்கத்தில், ரசிகர்களை மகிழ்விக்கும் புதுமையான படைப்பாக மிகப்பெரும் பொருட்செலவில் இந்த படம் உருவெடுத்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் 2 நாள்களுக்கு இரவு நேர போக்குவரத்துக்குத் தடை!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

தோ்தல் பணியின்போது திமுக தொண்டா் மாரடைப்பால் மரணம்; அதிர்ச்சியில் தாயும் உயிரிழப்பு: சேலத்தில் சோகம்

யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


