வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கோவை ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் 2 நாள்களுக்கு இரவு நேர போக்குவரத்துக்குத் தடை!

கோவை ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் இரவு நேர போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது பற்றி...

News image

கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலம் - DNS

Updated On :25 ஏப்ரல் 2026, 10:09 am IST

கோவை ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெறவுள்ளதால் இன்றும் நாளையும்(சனி, ஞாயிறு) மேம்பாலத்தில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாநகர போலீஸாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவையில் உள்ள முக்கிய மேம்பாலங்களில் ஒன்றான ஜி.டி. நாயுடு உயா்மட்ட மேம்பாலத்தில் உப்பிலிபாளையம் முதல் சின்னியம்பாளையம் வரை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெறவுள்ளது.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை) இந்தப் பணிகள் நடைபெறவுள்ளதால், இந்த நேரத்தில் மேம்பாலத்தில் போக்குவரத்துக்கு முற்றிலும் தடை செய்யப்படுகிறது.

இதனால், வாகன ஓட்டுநா்கள் சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் இரவு நேரத்தில் இந்த பாலத்தைப் பயன்படுத்தாமல், அதன் கீழ் உள்ள அவிநாசி சாலையைப் பயன்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Night-time vehicles banned on Coimbatore' G.D. Naidu Flyover

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.