ராசு மதுரவன் இயக்கிய "முத்துக்கு முத்தாக' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பைசல். அந்த படத்தில் அவர் நட்டி நட்ராஜின் சிறு வயது தோற்றத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு "செங்காடு', "மூடுபனி', "அன்புடன் அழகன்', "சமனன்' உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தை சேர்ந்த பைசல், பட்டப்படிப்பை முடித்து விட்டு மும்பை சினிமா ஆர்ட் அகாடமியிலும், சென்னை கூத்துப்பட்டறையிலும் நடிப்பு பயிற்சி முடித்தார். அதோடு நடனம் மற்றும் சண்டை பயிற்களையும் முறையாக எடுத்துக் கொண்டு சமீபத்தில் வெளியான "பாயும் ஒளி நீ எனக்கு' படத்தில் வில்லனாக அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தில் ஹீரோ விக்ரம் பிரபுவின் தந்தையை கொன்று அவரோடு மோதும் கொடூர வில்லனாக நடித்துள்ளார். தற்போது "டாடி' என்ற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.
""சின்ன வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது கனவாகவும், லட்சியமாகவும் இருந்தது. இதற்காக முறைப்படி நடிப்பு, நடனம், சண்டை பயிற்சிகளை பெற்றேன், கல்லூரி நாள்களில் "நாற்காலிகாரன்', "அப்பா செத்த நடுக்கூடம்' உள்ளிட்ட பல நாடகங்களில் நடித்து என்னை மெருகேற்றிக் கொண்டேன். குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் நடித்து விட்டு தற்போது "பாயும் ஒளி நீ எனக்கு' படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகி உள்ளேன். தொடர்ந்து வில்லன் வாய்ப்புகள் வருகிறது. எல்லா விதமான கேரக்டர்களிலும் நடித்து "இயக்குநரின் நடிகன்' என்று பெயரை பெற விரும்புகிறேன். சினிமாக்களில் பாகுபாடு இல்லை. நல்ல சினிமாக்களில் இருக்க வேண்டும். அதுவும் அதை வெற்றிப் பெற வைக்க கூடிய முனைப்பில் உழைக்க வேண்டும்'' என்றார் பைசல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் 2 நாள்களுக்கு இரவு நேர போக்குவரத்துக்குத் தடை!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

தோ்தல் பணியின்போது திமுக தொண்டா் மாரடைப்பால் மரணம்; அதிர்ச்சியில் தாயும் உயிரிழப்பு: சேலத்தில் சோகம்

யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


