ரஷியாவில் இந்தியத் திரைப்படங்கள் பல ஆண்டுகளாகவே திரையிடப்பட்டு வருகின்றன. பல படங்கள் இன்றும் அந்த நாட்டு ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துவருகின்றன.
1951-ஆம் ஆண்டிலேயே நடிகர் ராஜ்கபூரின் "ஆவாரா' படம் திரையிடப்பட்டு பிரபலமானது. அவரும் ரஷிய ரசிகர்களை மிகவும் கவர்ந்தார்.
அடுத்து "சீதா அவுர் கீதா' (1972) திரையிடப்பட்டது. இப்படம் அந்த நாட்டு தொலைக்காட்சிகளில் இன்றும் அவ்வப்போது ஒளிபரப்பப்பட்டுவருகிறது.
1982-இல் மிதுன் சக்ரவர்த்தி நடித்த "டிஸ்கோ டான்சர்' என்ற திரைப்படம் மிகச் சிறப்பாக வெற்றியைப் பெற்றது.
1990-களில் ரஷியா உடைந்தவுடன் இந்தியத் திரைப்படங்கள் திரையிடப்படுவது அறவே நின்றுவிட்டன.
இந்த இடத்தை ஹாலிவுட், நெட்பிளிக்ஸ் போன்றவை பிடித்துக் கொண்டன. பின்னர், யூ டியூப் சேனலில் இந்தியத் திரைப்படங்கள் வெளியாகின.
"மை நேம் ஈஸ் கான்' (2010), "பஜிராவ் மஸ்தானி' (2015 ) இரு திரைப்படங்களுக்கு ரஷியர்களிடம் ஆதரவு கிடைக்கவில்லை. இதனிடையே ரஷியன் பெடரல் சேனல் சில இந்தியத் திரைப்படங்களை வாங்கி, திரையிடத் தொடங்கியது. இது கட்டணச் சேனல் ஆகும்.
விடுமுறை நாள்களில் ரஷியர்கள் "கே.ஜி.எஃப். (பகுதி 1-2018; பகுதி 2-2022) , "ஆர் ஆர் ஆர்' (2022), " ராதேஸ்யா' (2022), "பாகுபலி' (2015), "வார்' போன்ற படங்களைப் பார்க்கத் தொடங்க, இப்போதும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.
இந்திய பிலிம் அசோசியேஷனின் இணை ஒருங்கிணைப்பாளர் டாக்சின் நசிம் என்பவர், மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை ஓர் ஆண்டு குத்தகைக்கு எடுத்து, திரைப்படங்களைத் திரையிட்டுவருகிறார்.
இந்தியாவில் 2021-இல் வெளியான"புஷ்பா', ரஷியாவில் திரையிடப்பட்டபோது ஒறே வாரத்தில் 19 மில்லியன் ரூபிள் வருவாய் ஈட்டியது. ரஷ்யர்கள்தான் பெருமளவில் ரசித்துள்ளனர்.
நடிகர் ஷாரூக்கானின் "பதான்' திரைப்படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் சில காட்சிகள் ரஷியாவில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரஷியாவில் திரைப்படம் எடுத்தால் சிறப்புச் சலுகைகள் உள்ளன. பனிப் பிரதேசம் என்பதோடு, ஐரோப்பியக் கட்டடங்கள், மலைகள், இயற்கைக் காட்சிகள் என அனைத்தும் உள்ளது. இங்கு படம் எடுத்தால் அரசு சிறப்புச் சலுகைகளையும் வழங்கிவருவதால், பிற நாட்டுத் திரைப்படங்கள் பல அங்கு படமாக்கப்பட்டுவருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


